யாழ். போதனா வைத்தியசாலைக்கு நிதியுதவி-


imagesயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மகப்பேற்று விடுதியை கட்டுவதற்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். வைத்தியசாலையின் விடுதி மிகவும் பழைமை வாய்ந்ததனால், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், 2015ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 300 மில்லியன் ரூபா நிதி சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு விடுதிக்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிக்கவுள்ளது என பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்-

ramanadapuram thankachchi madathilஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மறைஆயர் யேசுராஜா தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. மீனவர்களின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈ டுபட்டுள்ளனர். முன்னதாக, இராமேசுவரத்தில் மீனவப் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 5 மீனவர்களின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தமும், அதற்கு முன் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதடும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு இலங்கைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் தண்டனையை நிறுத்திவைக்க அழுத்தம் கொடுக்கத் தவறினால் நவம்பர் 7ம் திகதி அனைத்து விசைப்படகு மீனவர் பிரநிதிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்படும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் – 63 பேர் வெளியேற்றம்-

train_lanka_கண்டி – புபுரஸ்ஸ – ஸ்டெலன்பர்க் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் இவ்வாறு ஸ்டெலன்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான வசதிகள் தொலுவ பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் 40 எச்.ஐ.வி. தொற்றாளர்கள்- ஹரிஸன் எம்.பி-

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 40 இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. இந்த 40பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன், நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இதன்போது ஹரிஸனின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, ‘எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 772பேர் மட்டுமே இலங்கையில் உள்ளனர்’ என்று கூறியுள்ளார். உலகின் 33 நாடுகள், இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆயினும், இலங்கையில் இவ்வகை நோயாளர்கள் அதிகரித்துள்ளனர். இலங்கையில், 196 நோயாளர்கள் கடந்த வருடம் இனங்காணப்பட்டனர். இவ்வருடம் ஒக்டோபரவரை 169 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நோயை சுகப்படுத்த முடியாது. எனினும், எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு கூட்டு வைரஸ் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என பிரதி சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

பாதுகாப்பற்ற கிணற்றினுள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு-


paathukaapatra kinatril vilunthuஅம்பாறை – சம்மாந்துறை – சொறிக்கல்முனையில் 4 வயது சிறுவன் ஒருவன் நிலத்தடி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை ரவி அனுசாந்த் என்ற சிறுவனே சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த இவர், பாதுகாப்பற்ற கிணற்றினுள் கிடப்பதைக் கண்ட அயலவர்கள் உடனடியாக மீட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறைப் பொலீஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை-


மட்டக்ளப்பு, ஏறாவூர் – மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 13வயதான குறித்த மாணவி, பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறுகின்றன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் – கொழும்பு வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம்-


puttalam colombo roadபுத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விஷேட வாகனப் போக்குவரத்து திட்டம் ஒன்றை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்றுகாலை 10 மணிமுதல் மாலை 4 வரையான காலப்பகுதியில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் – கொழும்பு பிரதான வீதிக்கு ஊடாக அமைக்கப்பட்டுள்ள மானவேரிய ரயில்பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர.


மாலக்க சில்வா மீது தாக்குதல்-


maalakka silva meethuஅமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, மூவர் காயம்-


திருகோணமலையில் கட்டடமொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்து மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பழைய கட்டடமொன்றை அகற்றுவதற்கு முயற்சித்த சிலர்மீதே நேற்றிரவு சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.