தற்கொலைத் தாக்குதலில் 55 பேர் மரணம் – பாகிஸ்தானில்

PakistanWagahBBczjQ8பாகிஸ்தானில் வாகா எல்லையில் நேற்று நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் 55பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள வாகா எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்புடன் கூடிய அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட தயார் ஆயினர். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி அங்கிருந்த இரும்பு ‘கேட்’ மீது மோதி, தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான். அப்போது அந்தப் பகுதியே அதிர்ந்தது. அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் சிக்கி 55 பேர் வரை பலியாகியுள்ளனர் பல உடல் சிதறிக் கிடந்தன, 120 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே மரணித்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.