மூளாய் கலைவாணி சனசமூக நிலையத்தில் சிறுவர் தின, ஆசிரியர் தின நிகழ்வுகள்-
யாழ். மூளாய் கலைவாணி சனசமூக நிலையத்தில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுமாலை 3மணியளவில் கலைவாணி கோல்ட் ஸ்டார் சிறுவர் கழகத்தினதும் முன்பள்ளியினதும் சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கோல்ட் ஸ்டார் சிறுவர் கழகத் தலைவர் செல்வன் தங்கராஜா நிலக்சன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வன யோசுவா அடிகளார் அவர்களும், கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது வடமாகாண சபை ஒதுக்கீட்டின் கீழ் மேற்படி சனசமூக நிலையத்தில் நடைபெற்று வரும் முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியக் கருவிகளை வழங்கியிருந்தார். இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும்போது இன்றைய இச் சிறார்களின் கைகளில் தான் நாளைய எமது சந்ததியினரின் எதிர்காலம தங்கியுள்ளது. இச் சிறார்களை உரிய முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய நிலை எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும். இப் பகுதியில் உள்ள சிறார்கள் புலமைப்பரீட்சையில் உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களை மனதார பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன் இவர்கள் எதிர்காலத்தில் உயர் நிலை அடைய வாழ்த்துகின்றேன். இதே வேளை மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் வகிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டதோடு எதிர்காலத்திலும் இவ் மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பில் என்னால் ,இயன்ற உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதனைத் தொடாந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன.