இந்தியா – சீனா – இலங்கை

untitledஇந்தியாவின் காஷ்மீர் மற்றும் இமாச்சலபிரதேச பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதுவரை தரைவழியாக நடந்து வந்த ஊடுருவல் சம்பவங்கள் தற்போது நீர் வழியாகவும் நடக்க தொடங்கியுள்ளது. அதன்படி எல்லையில் அமைந்துள்ள பாங்காங் ஏரி வழியாக சீன ராணுவம் சமீபத்தில் ஊடுருவிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் லடாக் அருகே இமயமலை பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், 45 கி.மீ. பகுதி இந்தியாவிலும், மீதமுள்ள 90 கி.மீ. பகுதி திபெத், சீன பகுதிகளிலும் உள்ளது. இந்த ஏரி வழியாக கடந்த மாதம் 22-ந் தேதி சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் திடீரென ஊடுருவியது. உடனே இதை கண்டுபிடித்த இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு வீரர்கள், imagesஅந்த ஏரியில் எல்லைக்கட்டுப்பாடுக் கோட்டின் பகுதியில் சீன வீரர்களை இடைமறித்தனர். பின்னர் சீன வீரர்களை முன்னோக்கி நகர இந்திய வீரர்கள் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் ஏரியின் மேற்குகரை பகுதியில் சாலை வழியாகவும் சீன வீரர்கள் இந்தியப்பகுதிக்குள் நுழைந்தனர். அங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ-திபெத் வீரர்கள், ‘இது எங்கள் பகுதி’ என குறிக்கும் பேனர்களை அசைத்து சீன வீரர்களை நிறுத்தினர். இதனால் எல்லையில் பதற்றம் உருவானது. பின்னர் இந்த அத்துமீறல் தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதைத்தொடர்ந்து இரு பகுதிகளில் இருந்தும் சீன வீரர்கள் திரும்பி சென்றனர்.
இந்தியாவின் சுமர் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 2 போர்க்கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாக் ஜலசந்தி பகுதியில் சமீபகாலமாக நடந்து வரும் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் குறித்தும் சமீபத்தில் இந்தியா சென்றிருந்த கோத்தபயவிடம் மத்திய அரசு கடும் அதிருப்தியை தெரிவித்தது. கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த இலங்கை கடற்படை தளபதி இது குறித்து கூறும்போது, கொழும்புக்கு நல்லெண்ண அடிப்படையில் தான் சீன போர்க்கப்பல்கள் வந்ததாகவும், இது வழக்கமான நடவடிக்கைதான் என்றும். மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என்று உறுதியளித்த அவர், இலங்கையில் சீன ராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தாக்குதலில் ஈடுபடக்கூடிய திறன் வாய்ந்த சீனாவின் மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்றை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த இரட்டை வேடத்தன்மை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இது தொடர்பாக இலங்கை அரசை தொடர்பு கொண்டு, இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இதே நேரம் இந்தியாவில் இன்னும் கனவாகவே இருக்கின்ற அதிவேக புல்லட் ரெயில். திட்டத்தை சென்னை–டெல்லி இடையே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயும் பணியை சீனாவை சேர்ந்த ‘சீனா ரெயில் ஹைஸ்பீட்’ நிறுவனத்திடம் ரெயில்வே வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்படைத்தது. சீன அதிபர் ஜின் பிங் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது, மத்திய அரசு, சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாகும்.