உலக வர்த்தக மைய கோபுரம் மீண்டும் திறப்பு-

2imagesCAVTMIWPulaga varthaka maiyam001ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான நிவ்யோர்க் உலக வர்த்தக மையத்தின் பிரதான கோபுரங்கள் 13வருடங்களின் பின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளியீட்டு பகுதியின் பணியாளர்கள் முதலாவது கோபுரத்திலுள்ள 104ஆவது மாடியிலுள்ள தமது அலுவலகங்களுக்கு திரும்பியுள்ளதுடன் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மீள்திருத்தப்பட்ட வானளாவிய கட்டிடங்கள் தற்போது அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடங்களாக கருதப்படுகின்றன. அமெரிக்க உலக வர்த்தக மையத்தில் 60 சதவீத பகுதி அமெரிக்க அரசின் பொது சேவைகளுக்கான நிர்வாக செயற்பாடுகளுக்காக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. 541மீட்டர் உயரம் கோபுரத்தில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுகூடம் மற்றும் அரும்பொருட்காட்சியகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஓமந்தைப் பகுதி மாணவனை காணவில்லையென முறைப்பாடு-

Omanthai paguthiவவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜே.ஜெயகெனடி தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை சூரன்போர் பார்பதற்காக வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியிலிருந்து வவுனியா நகருக்கு வந்த சந்திரகுமார் சுகிர்தன் என்ற 16வயது மாணவன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் சந்திரகுமார் ஜெயசித்திரா நேற்று தம்மிடம் முறைப்பாடு செய்தபோது தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை சூரன்போருக்காக வவுனியா நகருக்கு சென்ற எனது மகன் வியாழக்கிழமை வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நின்றதை பலர் கண்டுள்ளனர். அன்று இரவு 8 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளான். ஆனால் இன்று வரை வீடு வந்து சேரவில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ளான் என தாயார் கூறியுள்ளார்.

தண்ணீர் பெருக்கெடுப்பினால் மீட்பு பணிகள் இடைநிறுத்தம்-

koslanda_image_005கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலவும் மோசமான காலநிலையுடன் பேருகலை மலையிலிருந்து இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்தமையால் மீட்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலி பெருக்கி மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று ஏழாவது நாளாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரத்துக்குள் அங்கு மோசமான காலநிலை நிலவியது. இதனையடுத்தே மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கு மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் 1,000 குடும்பங்கள் இடம்பெயர்வு-

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக சுமார் 1,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பல பிரதான வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளுடன் தொடர்புடைய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சரத் லால் குமார கூறியுள்ளார்.