வவுனியா வடக்கு கமக்கார, கால்நடை அமைப்புகளின பிரதிநிதிகளின் சந்திப்பு-

vavuniya vadakku kamakkaara (6)வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் அழைப்பையேற்று வவுனியா வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் நேற்று 03.11.2014 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ.ஜங்கரநேசன் அவர்களுடன் வவுனியா வடக்கு கமக்கார, கால்நடை அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ ம.தியாகராசா, பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில்  வவுனியா வடக்குப் பிரதேசத்தில் காணப்படும் விவசாயக் குளங்களின் புனரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் கமக்கார அமைப்புப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது தொடர்ந்து கால்நடை, பழச்செய்கை, ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா வடக்குப் பிரதேசத்தில் அவசியமாகத் திருத்தப்படவேண்டிய குளங்கள் தொடர்பாகவும், சிறு குளங்களை இணைத்து பாரிய அளவிலான ஒர் நீர்பாசனத திட்டத்தை இப்பிரதேசத்தில் அமைக்கப்படவேண்டும் எனவும் திட்ட முன்மொழிவொன்றை இப்பிரதேச மக்கள் சார்பில் வடக்கு மாகாணசபை அமைச்சர் கௌரவ பொ.ஜங்கரநேசன் அவர்களிடம் முன்வைத்தார்.

vavuniya vadakku kamakkaara (1)vavuniya vadakku kamakkaara (7)vavuniya vadakku kamakkaara (8)vavuniya vadakku kamakkaara (6)vavuniya vadakku kamakkaara (2)vavuniya vadakku kamakkaara (4)