அடிப்படைத் தேவைகளுக்காக காத்திருக்கும் கொஸ்லாந்தை மக்கள்-

meetiyapeththa man sarivu (1)பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான உணவு சார்ந்த தேவைகளை அரசாங்கமும், நிறுவனங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களும் நியாயமான அளவிற்கு பூர்த்திசெய்து வருகின்றனர். இருந்தபோதிலும் தற்போது அங்கு அடிப்படையான மற்றும் அவசியமான தேவையாக உள்ள குளிர் பிரதேசத்திற்கு உகந்த படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள், குளிர்கால உடைகள், நில விரிப்புகள் மற்றும் உடுபுடவைகள், தான் மிகமிகக் குறைவாக உள்ளது. அதாவது உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவும் அரிதாகவுமே இவை கிடைக்கின்றன. எனவே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களையும் போதியளவில் வழங்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களும், அவர்கள் சார்ந்த சமூக அமைப்புகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்களின் விபரங்கள்-

kkoslantha_bodyபதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவில் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. தலைத்தீபாவளிக்கு பெற்றோர் வீட்டுக்கு வந்த 23 வயதுடைய யுவதியும் அவரது கணவரும் இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் என நம்பப்படுபவர்களது விபரம் வருமாறு,

1. சந்திரவதனி
2. தேவிகா
3. லக்சான்
4. லுக்சிதா
5. சுஜன்
6. பாலசுப்ரமணியம்
7. பவானி
8. ரஞ்ஜிதம்
9. இராஜகௌரியும் அவரது கணவரும் (தலைத்தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்தவர்கள் )
10. ராமன்
11. திலகலட்சுமியும் அவரது கண­வரும்
12. விதுசிகா
13. முத்து
14. செல்வநாயகி
15. தங்கவேல்
16. குடும்பநலத் தாதியும் அவரது மகனும் மகளும் மகனின் மனைவியும்
17. ருத்திரன்
18. மின்னல் என்றழைக்கப்படுபவர்
19. மாரியப்பன்
20. மாரியாயி
21. மேசன் வேலை செய்பவரும் அவரது மனைவியும்
22. தெய்வானை
23. பிரகாஷ்
24. லீலாவதி
25. மாரியாயி
26. ஆர்னோல்