Header image alt text

யாழ் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-

yaal pandatharippu (2)யாழ் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (04.11.2014) செவ்வாய்க்கிழமை அதிபர் திருமதி பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணக்கல்விப் பணிப்பாளர் திரு ,ராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பழைய மாணவியும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் பழைய மாணவியும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று எனது பாடசாலைப் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். நான் இப் பாடசாலையில் மாணவியாக இருந்த காலத்தினை எண்ணிப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. என்னை கற்பித்து இன்றைய இந்த நிலைக்கு உய்த்துவதற்கு அத்திபாரமாக அமைந்த இப் பாடசாலை எந்த ஒரு சந்தர்ப்த்திலும் மறந்துவிட முடியாத ஒன்றாகும். எம்மை இந்த உலகிற்கு அர்பணித்தவள் தாய் அவ்வாறே எம்மை இந்த உலகில் சிறகடித்து பறப்பதற்கு வழிவகுப்பவள் இந்த பாசாலைத் தாய். இந்த வகையில் இங்குள்ள ஒவ்வொரு மாணவிகளுக்கும் இப் பாடசாலை தாயாகவே உள்ளது. இன்று இந்த இலங்கைத் தீவில் ஆண்களுக்கு சமமான வகையில் பெண்கள் எண்ணிக்கையில் சரி, கல்வியில் சரி, அரச பதவிகளில் சரி, உயர் நிலைகளில் சரி, அரசியலில் சரி சகல துறைகளிலும் உயர் நிலை பெற்றுள்ளமையை Read more

தேர்தலில் போட்டியிட தடையுள்ளதா? என ஜனாதிபதி உயர் நீதிமன்றிடம் கேள்வி-

images18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, மேலும் ஒரு தவணை பதவிக் காலத்திற்காக தேர்தலில் போட்டியிட தடை உள்ளதா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற பதிவாளரினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்று இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ள விடயம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் எழுத்துமூல விளக்கத்தை சமர்ப்பிப்பதற்கு இம்மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 03 மணி வரை காலஅவகாசம் உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய, உயர் நீதிமன்ற பதிவாளரால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தம் நிறைவு-

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சுதந்திர ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 10,000 ரூபா சம்பள உயர்வு, வைத்திய காப்புறுதி, சேவை கடன்தொகை வழங்கல், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை அகற்றல், ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கம் இன்றுகாலை 9 மணியளவில் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தது. வேலை நிறுத்தத்தினைத் தொடர்ந்து விமான சேவைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததுடன் மின்சாரமும் தடைபட்டிருந்தது. சுதந்திர ஊழியர் சங்கமானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தொழிற்சங்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா, வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை, தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த பொன்சேகாவின் கடவுச்சீட்டு, 100,000 ரூபாய் பிணை முறியின் அடிப்படையில் அவரிடம் ஒப்படைப்பதற்கு கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் தேவிகா தென்னகோன் உத்தரவிட்டார். பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக, சரத் பொன்சேகா சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற அனுமதி வேண்டுமென்றும் அவரது சட்டத்தரணியினால் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர், சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கியதோடு அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதிவரை, சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்கு சரத் பொன்சேகாவுக்கு அனுமதி கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15,700 வீடுகள் நிர்மாணம்-

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்கீழ் இதுவரை 15,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக யாழ் இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. 19,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, வட பகுதிக்கான ரயில் மார்க்கத்தை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும் என யாழ். இந்திய துணை தூதுவர் எஸ். தட்சணாமூர்த்தி கூறியுள்ளார்.

ராமர் பாலத்துக்கு ஆபத்தில்லை – நிதின் கட்காரி-

சேது சமுத்திரதிட்டத்தினால் ராமர் பாலத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என இந்திய போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சேதுசமுத்திர திட்டத்தினால் இந்துக்களினால் நம்பப்படும் ராமர் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. எனினும் அமைச்சர் நிதின் கட்காரி இதனை நிராகரித்துள்ளதுடன், சுற்றாடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இந்த திட்டம் அமுலாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.