யாழ் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-
யாழ் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (04.11.2014) செவ்வாய்க்கிழமை அதிபர் திருமதி பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணக்கல்விப் பணிப்பாளர் திரு ,ராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பழைய மாணவியும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் பழைய மாணவியும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று எனது பாடசாலைப் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். நான் இப் பாடசாலையில் மாணவியாக இருந்த காலத்தினை எண்ணிப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. என்னை கற்பித்து இன்றைய இந்த நிலைக்கு உய்த்துவதற்கு அத்திபாரமாக அமைந்த இப் பாடசாலை எந்த ஒரு சந்தர்ப்த்திலும் மறந்துவிட முடியாத ஒன்றாகும். எம்மை இந்த உலகிற்கு அர்பணித்தவள் தாய் அவ்வாறே எம்மை இந்த உலகில் சிறகடித்து பறப்பதற்கு வழிவகுப்பவள் இந்த பாசாலைத் தாய். இந்த வகையில் இங்குள்ள ஒவ்வொரு மாணவிகளுக்கும் இப் பாடசாலை தாயாகவே உள்ளது. இன்று இந்த இலங்கைத் தீவில் ஆண்களுக்கு சமமான வகையில் பெண்கள் எண்ணிக்கையில் சரி, கல்வியில் சரி, அரச பதவிகளில் சரி, உயர் நிலைகளில் சரி, அரசியலில் சரி சகல துறைகளிலும் உயர் நிலை பெற்றுள்ளமையை யாவரும் அறிவீர்கள். இவ் நிலைகளுக்கு மேலாக மேலும் பெண்கள் உயர இக்காலப் பகுதி மிகப் பொருத்தமான காலமாகவே அமைந்துள்ளது. இதே வேளை பெண்கள் மீதான அடக்குமுறை பல வழிகளிலும் ஏற்படுத்தப்படுகின்றது என்பதனை நான் மறுக்கவில்லை. அதனை உடைத்தெறிய பெண்கள் தயாராக இருக்க வேண்டும். எமது இனத்தின் கடந்த கால வரலாற்றில் பெண்கள் பல சாதனைகளை பல துறைகளிலும் ஏற்படுத்தி பரலாக்கபபட்டிருப்பது யாவரும் அறிந்த உன்மை. இந்த வகையில் எந்தத்துறையில் ஆர்வம் கொண்டாலும் அத்துறை தொடர்பில் ஊக்குவிப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளேன்., இதே வேளை பெண்கள் மற்றும் பெண் பிளைகள் மீதான அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்கு அஞ்சாத வீர தமிழ் பெண்களாக தொழிற்பட தயாராக எம்மை நாமே மாற்றிக் கொள்ள தயாராக இருக்கவேண்டும். கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட கிறீஸ் பூதம் தொடர்பில் தனித்து போராடி பல விடயங்களை வெளிக்கொண்டு வந்தேன். இவ் நிலையில் 2013ம் ஆண்டு அனைத்து உலக மகளீர் தினத்தில் எமது பிரதேச பெண்கள் 10000 பேரிடம் கையெப்பத்தினைக் குறித்து, இவ் மகளீர் தினத்தினை விடுமுறை தினமாக மாற்ற வேண்டி இந்த நாட்டின் முதல் பெண்மணிக்கு அனுப்பி வைத்திருந்தேன். இதற்கும் மேலாக நான் பதவிக்கு வந்த காலம் முதலாக எனக்கு வழங்கப்படும் ஊதியத்ததை பெறாது துன்பத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்கே வழங்கி வருகின்றேன். இந்த வகையில் பல திட்ங்களை பெண்களின் நலனுக்காக மேற்கொண்டு வருவதற்கான பிரதான காரணம் பெண்கள் தொடர்பில் பல வகைகளிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே. நீங்களும் இவ் விடயம் தொடப்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தசாப்தத்தில் பாரதியின் கனவினை நனவாக்க முயற்சிக்க உதவ வேண்டும். பாடசலைக் கல்வி என்பது முழுமையான கல்வி என்பதனையே குறிக்கும். வெறுமனே ஏட்டுக் கல்வியைப் பெறும் நிலைக்கு மேலாக பாடசாலையை முழுமையாக பயன்படுத்தி மாணவிகள் சகல துறைகளிலும் ஈடுபடும் வசதிகளை பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகம் ஏற்படுத்த முனவரவேண்டும் சகல விளையாட்டுத் துறை உட்பட சகல துறைகளிலும் இவ் விடயம் தொடர்பில் எம்மால் இயலுமான உதவிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன். நான் இன்று இப்பாடசாலையில் ஒரு பிரதேசத்தின் தலைவராக அல்ல உங்களில் ஒருவராக இப்படசாலையின் பழைய மாணவியாகவே உரையாற்றுகின்றேன். இதே வேளை இவ் ஆண்டு முதலாக இப் பாடாலையில் இருந்து பல்கலைக் கழகம் புகும் மாணவர்களுக்கு பாசாலையின் பரிசளிப்பு விழாவில் தலா 1000.00ம் ரூபாவும் உயர் தரப் பரீட்சையில் 3 பாடங்களிலும் அதி உயர் சித்தி பெறும் மாணவிகட்கு 10000.00 ரூபாவும் பல்கலைக் கலவியைத் தொரும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவிகட்கு கல்விக்காண 4 வருட கால உதவியையும் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 அதிவிசேட சித்தி பெறுபவர்கட்கு 1000.00ரூபாவும், உயர்தர கல்வியில் மேலதிக தனியார் துறைக் கல்வியைப் பெற முடியாத வறிய மாணவர்கட்கு இலவச கல்வி பெறுவதற்கான வசதி வாய்ப்புக்களையும் செய்யத் தயாராக உள்ளேன் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றேன். இந்த வகையில் மாணவிகள் எல்லாத்துறைகளிலும் உதவிகளை பெற்று வளரவேண்டும் என்பதே எனது ஆவலாகும். இவ் உயரிய நிலையினை எட்டி நாம் பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி என்ற பெருமையை எங்கும் பறைசாற்ற வேண்டும் என இவ் இடத்தில் வினயமாக கேட்டுக் கொண்டு விடை பெறுகின்றேன் என்று தெரிவித்தார்.