கோவில்குளம் சிவன் கோவிலில், கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்காய் விசேட பூஜை-

Kovilkulam sivan kovilil (1)வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள், கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகம், தமிழ் விருட்சம், மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தினரும் இணைந்து, மண்சரிவில் உயிர்நீத்த எமது உறவுகளுக்காய் ஓர் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (06.11.2014) மதியம் 12.00 மணியளவில் கோவில்குளம் சிவன் கோவிலில் நடைபெற்றது. உயிர் நீத்த மக்களின் ஆத்மா சாந்திக்கான இவ் பிரார்த்தனை நிகழ்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), நகர சபையின் செயலாளர் திரு சத்தியசீலன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மூத்த ஊடகவியலாளர் திரு மாணிக்கவாசகம், வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு சந்திரகுமார்(கண்ணா), மக்கள் வங்கியின் நகர கிளையின் முகாமையாளர் திரு றோய் ஜெயக்குமார், கண்ணகி தேவராஜா ஆகியோருடன் பல சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Kovilkulam sivan kovilil (20)Kovilkulam sivan kovilil (18)Kovilkulam sivan kovilil (16)Kovilkulam sivan kovilil (13)Kovilkulam sivan kovilil (11)Kovilkulam sivan kovilil (10)Kovilkulam sivan kovilil (9)Kovilkulam sivan kovilil (8)Kovilkulam sivan kovilil (2)Kovilkulam sivan kovilil (1)