ஜனாதிபதித் தேர்தல் பற்றிய உயர்நீதிமன்றத்தின் கருத்து-

janaathipathi therthal patriyaஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் கருத்து நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவிக்கப்படவுள்ளது. மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கோரியுள்ளார். அதன்படி உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இது குறித்து விளக்கக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கமைய சுமார் 40க்கும் மேற்பட்ட விளக்கக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றை ஆராய்ந்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட நீதியரசர்கள் நாளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவுள்ளனர் இதேநேரம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மங்கள சமரவீர இணைந்தால் அமைச்சரவை மாற்றம்-

mangala samaraweera inainthaalசிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பவிருப்பதாக தெரியவருகின்றது. அவர், நாடு திரும்பிய பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்வாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மங்கள சமரவீர எம்.பி, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் இணைங்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதேவேளை ஜனாதிபதிக்கும் மங்கள சமரவீரவுக்குமிடையிலான இரகசிய சந்திப்பு கடந்த 3ம்திகதி இரவு மொரட்டுவையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

வடக்கு முதல்வர் தலைமையில் சென்னையில் சட்டத்தரணிகள் மாநாடு-

imagesCARH13Y8இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சென்னையில் நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் மாநாட்டில் இன்று தலைமை தாங்கவுள்ளார். சென்னை வித்தியோதயா பள்ளியில் இன்றுமுற்பகல் இடம்பெறவுள்ள நிகழ்வில் பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல் என்ற தொனிப்பொருளில் வட மாகாண முதலமைச்சர் உரையாற்றவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தரணிகள் மாநாட்டில் பங்கேற்கும் முகமாக இலங்கையிலிருந்து நேற்று முன்தினம் வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் இந்தியா புறப்பட்டுச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சட்டரீதியான அகதிகளையும் அவுஸ்திரேலியா பாதுகாக்கவில்லையென குற்றச்சாட்டு-

சட்ட ரீதியான இலங்கை அகதிகளையும் அவுஸ்திரேலியா பாதுகாப்பதற்குத் தவறி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவுக்கு இலங்கை தொடர்பான அறிக்கைகளை கையளித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இவ்வாறு 77 அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களின் அறிக்கைகளை முன்வைத்திருந்தன. குறித்த 77 அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த பிரச்சினையை எழுப்பி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறி நடத்தி வருவதாக அவை குற்றம் சுமத்தியுள்ளன.

மீன்பிடி படகுகளை கண்காணிக்கும் கருவிகள் இறக்குமதி-

ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை நீக்கிக் கொள்ளும் நோக்கில், இலங்கையில் மீன்பிடி படகுகளை கண்காணிப்பதற்கான கருவிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சர்வதேச சட்டத்திட்டங்கள் மீறப்பட்டமைக்காக இலங்கையில் இருந்து கடலுணவு பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. இந்த தடையைநீக்குவதற்காக, சர்வதேச சட்டத்திட்டங்களை உரிய வகையில் கடைபிடிக்க இலங்கை மீன்பிடி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் மீன்பிடி படகுகளை கண்காணிப்பற்கான கருவிகளை, டென்மார்க்கில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

12ஆவது நாளில் 14ஆவது சடலம் மீட்பு-

12vathu naalil 14vathu sadalamபதுளை, கொஸ்லந்த மீரியாபெத்தயில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 40 வயதான பெண்ணொருவரின் சடலமும் 09 வயது சிறுமியொருவரின் சடலமும் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும்பணி 12ஆவது நாளாக இன்றுகாலை மேற்கொள்ளப்பட்டபோதே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் அப்பகுதியிலிருந்து மாடொன்று இறந்தநிலையில் மீட்கப்பட்டதுடன் இதுவரை 14 சடலங்கள் அப்பகுதியிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகளை இடைநிறுத்துவது தொடர்பில் மக்களின் கருத்துக்களை இடர் முகாமைத்துவ அமைச்சர் எழுத்து மூலம் கோரியிருக்கின்றார்.

மீரியாபெத்தயில் மரண சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்-

landslid_witness_012மீரியாபெத்த மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுகொள்ள முடியாதெனில், மண்சரிவின் மீட்பு பணிகளை தொடர வேண்டும் என மீரியாபெத்த மக்கள் கோரியுள்ளனர். ஒருமாத காலத்தில் மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை பெறமுடியும் என தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே மீட்புப் பணிகளை நிறுத்துமாறு கோரியதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 2 வருடங்களேனும் செல்லும். இதனால் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட நிதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், இந்த மீட்பு பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் மீட்பு பணிகளுக்கு பொறுப்பான மத்திய மாகாண படைப்பிரிவின் தளதிபதி மனோ பெரேரா கூறுகையில், இராணுவத் தலைமைகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் மீட்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.