வேள்ட் விசன் பிரதிநிதி வலி மேற்கு பிரதேச சபைக்கு விஜயம்-
வேள்ட் விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய பிரதிநிதி 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேசசபைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வலி மேற்;கு பிரதேச சபை தவிசாளார் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களுடன் கலந்துரையாடினார். அவரது வருகையின்போது பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். பின்னர் தவிசாளருடன் உத்தியோகபூர்வ சந்திப்பினை அவர் நிகழ்தினார் இதேவேளை யாழ். சங்கானைப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வலி மேற்கு பிரதேச சபையால் 32 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகள் கொண்ட மீன் சந்தை அமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மிக நீண்டகாலமாக சங்கானைப் பகுதி மக்களது கோரிக்கைகள் நிறைவேற்ப்ப்படாது இருந்தநிலையில் இவ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
வலி மேற்கில் சர்வதேச கைகழுவுதல் தினம்-
சர்வதேச கைகழுவுதல் தினம் வலி மேற்கு பிரதேசத்தின் விக்டோறியாக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு வேள்விசன் நிறுவனத்தினரால் அவ் அமைப்பின் திட்டபணிப்பளர் அன்டனி தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வேள்விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமார், சங்கானைக் கோட்;டக் கல்விப்பணிப்பாளர் செல்வி. மரியாம் பிள்ளை, பிரதேச வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வினை ஒட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற 175 பிரதேச மாணவர்கட்கு இவ் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினரான வேள்விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று அவர்கள் உரையாற்றும்போது, இக் குடிநீர் வழங்கும் திட்டமானது மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாடசாலை மாணவர்களை மையமாக கொண்டதாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இத் திட்டம் மிகுந்த போட்டி நிலையில் உருவாக்கப்படுகின்றது. இத் திட்டம் தொடர்பில் 130 திட்ட முன் மொழிவுகள் சமர்பிக்கப்ப்ட போதும் வலி மேற்கு பிரதேசத்திற்கு இத்திட்டம் பலத்த போட்டி நிலையில் தெரிவு செய்யப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். இத் திட்டம் தொடர்பில் எமது பணி கடந்த யூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப் பிரதேச சிறுவர்கள் சுகாதாரமான சுத்தமான குடிநீர் பெற வேண்டும் என்பதெ எமது இலக்காகும் . இவ் திட்டம் ஏறத்தாள 3 வருடங்கள் வரை செல்லக் கூடிய ஒன்றாகும். இதே வேளை இத் திட்டத்திற்கு எமக்கு கை கொடுத்து உதவும் வலி மேற்கு பிரதேச சபை. சங்கானை பிரதேச செயலகம், பிரதேச வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றின் செயற்பாட்டுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், உரையாற்றும் வேள் விசன் நிறுவனத்தினது பணிகளை வெறும் வார்த்ததைகளால் செல்ல முடியாது. பல அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்களது வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு இவ் அமைப்பு எமது பிரதேசத்திலே பல வியங்களை மேற்கொண்டதற்கு மேலாக மாணவர்களுக்கான கல்வி சத்துணவு சகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வு தொடர்பில் பல நடவடிக்கைகளை மேறற்கொண்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. இவ் நிலையிலும் குடி நீர் தேவைகள் தொடர்பில் தற்போது எடுத்துவரும் முயற்சி என்பது எமது பிரதேச மக்களது மிக இன்றி அமையாத ஒன்றாகவே உள்ளது. இன்று எமது பிரதெசமானது சுகாதாரமான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல இடர்பாடுகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் பல துன்பங்களையும் துயரங்களையும் சுமக்கவெண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாகி உள்ளனர். இவற்றுக்கும் மேலாக இன்றைய இவ் கைகளுவும் தினம் இன்னுமோர் முக்கிய வியம் ஆகும் .எம் மத்தியில் இன்று புது வகையான தொற்றும் நோய்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இவற்றில் இருந்து எம்மை நாமே பாதுகாக்கும் பொருட்டு இவ் வகையான நோய்களுக்கான காரணங்கள் மற்றும் ஏதுக்கள் தொடர்பில் எம் மத்தியீலு; விழிப்புனர்வுகள் மிக அவசியமான ஒன்றாகும் இந்த வகையில் மாணவர்கள் மத்தியில் இவ் வியம் தொடர்பில் விழிப்புனர்வை ஏற்படத்தி நோய் வரு முன் காக்கும் நடவடிக்கைக்கு உதவியமை தொடர்பில் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிததுக் கொள்கின்றேன். இந்த இடத்தில் இதற்கும் மேலாக வேள்விசன் நிறுவனத்தின் பணிகளை பட்டியலிட வேண்டிய தேவை உள்ளது. இந்த நிறுவனத்தின் செயற்பாடானது சிறுவர் முதல் பெரியவர் வரை பலன் பெறத்தக்கதான முறையாக அமைவு பெற்றுள்ளது. குறிப்பாக முன்பள்ளி முதலாக இவ் அமைப்பினுடைய பணிகள் இடம் பெறுகின்றமை இவ் இடத்தில் குறிப்பிக் கூடிய ஓர் விடயமாகவே கொள்ள முடியும். இதற்கும் மேலாக ஒருதிட்டத்தினை நடை முறைப் படுத்தவதற்க முன்னதாக இவ் அமைப்பில் பணியாற்றுகின்றவர்கள் பல விடயங்கள் தொடர்பிலும் என்னுடன் தொடர்ப கெண்டு நேரடியாக மக்களுடன் கலந்துரையாடி உரிய பயனாளிக்க உரிய பயன் கிடைக்கத்தக்கதான வழியினை பின்பற்றுவது ஏனையவர்கட்கும் ஒரு சிறந்த முன்னுதாரனமாகும் இவற்றிலும் சிப்பபாக இவ் அமைப்பினுடைய பணிகள் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்டு வருவது மேலும் சிறப்பான ஒர் விடயம் என்றே கொள்ள முடியும்.
மக்கள் தொடர்பான அபிவிருத்திகளை முன் னெடுப்பதற்கு எமது பிரதேசத்தில் பல அமைப்புகள் இயங்குகின்றன. ஆயினும் பல காரணங்களினால் இவ் அமைப்புக்கள் தனித்தனியே இயங்க வேண்டிய சூழ் நிலை உருவாகி உள்ளது. இவ் நிலையானது உரிய இலக்கை அடைவதில் பல சிக்கல்களை உருவாக்கி உள்ளது. இதனால் அபிவிருத்தி பாதிக்கப்படுவதற்கும் மேலாக மக்கள் பாதிக்கப்டுகின்றனர். இவ் வாறான நிலை இவ் வேள் விசன் நிறுவனத்தின் பணிகளில் கிடையாது.. இவ் நிறுவனம் தனது ஒவ் வெரு பணி தொடர்பிலும் எமது பிரதேசத்திலுள்ள்ள அதிகாரபூர்வமான அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்கு மேலாக எமது பிரதேச அமைப்புகளை ஒன்று படுத்தும் பாலமாகவே உள்ளது என்பதனை இவ் அடத்தில் குறிப்பி முடியும். இச் செயற்பாடும் ஒரு பெரும் பணியாகவே உள்ளது. இந்த வகையில் செயற்பட்டு மக்கள் மத்தியில் ஒர் உன்னதமான மாற்றத்தினை அபிவிருத்தி நிலையினை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் இவ் வேள் விசன் நிறுவனத்தின் பணிகளை பாராட்டுவதோடு இப் பணி ஏனையோருக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.