Header image alt text

மீனவர்களின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல்-

meenavarkalin marana thandanaiyaiமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மியான்மருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடியின் குழுவில் இடம்பெற்றுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் மத்திய அரசு உச்சபட்ச கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சையத் அக்பருதீன் தெரிவித்தார். தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் திகதி தூக்குத் தண்டனை விதித்தது. 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான 20 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிங்கள மொழியில் இருந்தால், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. மேல்முறையீட்டு வழக்கில் மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக இலங்கை Read more

சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்ட் விசன் திட்டப்பணிப்பாளர் விஜயம்-

chulipuram kalvilaan pakuthikku world vision (5)வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அழைப்பின் பெயரில் 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை வலி மேற்கு பிரதேசத்தின் சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்விசன் அமைப்பின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று மற்றும் யாழ் மாவட்ட வேள் விசன் திட்டப்பணிப்பாளர் திரு அன்டனி ஆகியோர் விஜயம் மேறற்கொண்டனர். இப் பகுதியில் மக்கள் அன்றாடம்; குடிநீர் பெறுவதற்கு பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருவது அறிந்த விடயம். இவ் விடயும் தொடர்பில் மக்களது நிலையினை எடுத்து விளக்கவே இவ் விஜயம் ஏற்பாடாகி இருந்தது. முன்னதாhக அப் பகுதியில் பல காலத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட பிரதேச சபைக்கு சொந்த மான கினறுகள் பார்வையிடப்பட்டு அவை மக்கள் பயன் பாட்டிற்கு ஏற்றதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் பின்னர் கல்விழான் காந்திஜி சன சமூக கட்டிடத்தில் பயனாளிகளுடன் சந்திப்பு இடம் பெற்றது. இவ்நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது எமது வலி மேற்கு பிரதேச அபிவிருத்தியில் வேள் விசன் நிறுவனத்தின் பங்கு மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இந்த வகையில் 2015ம் ஆண்டின் இறுதியில் பிரதேசத்தில் நீர் தெடர்பில் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கிற்காக செயற்பட்டு வருகின்றேன். கடந்த ஆண்டில் கூட இவ் நிறுவனத்தினால் எமது பிரதேசத்தில் நீர்த்ததேவை பல வடிவங்களிலும் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வகையில் இவ் கல்விழான் பகுதியில் நீர் தொடர்பிலான தேவைகள் மற்றும் சுகாதாரம் தெடர்பிலான தேவைகள் நிறைவு செய்யும் பொருட்டே இத்திட்டம் இங்கு நடை முறைபபடுத்தப்பட உள்ளது. இத் திட்டத்திற்கு மக்களது ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்த்தில் இப்பகுதியில் முழுமையாக ஒர் சிறு கட்டனத்துடன் நீர் வினயோகமும் மலசல கூட வசதி அற்றவர்கட்கு மல சல கூட வசதியும் முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். Read more

அகதிகள் தொடர்பான குற்றச்சாட்டை ஏற்க முடியாது-அவுஸ்திரேலியா-

imagesஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி இதனைக் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் சுமார் 1200பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமின்றி சரியான வழியில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களை வரவேற்க அவுஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது என சீன்கெலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் உள்ள முகாம்களை கண்காணிக்க விசேட குழு-

sattavirothaசட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த பலர் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் நடத்தப்படுகின்ற விதம் மற்றும் அங்கு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழுவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முதலில் அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்கு வெளியேயிருக்கும் முகாம்களில் தடுத்து, வைத்து முடிவெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன என்பதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதி செய்யக்கூடிய திறன் அரசுக்கு இருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சலுகைகளை எதிர்பார்க்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்-

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புகலிடம் கோரியுள்ளவர்களுக்கான சில கொடுப்பனவுகளை மறுப்பதற்கான அதிகாரமுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கான சலுகைகள் உள்ளிட்ட அவர்கள் தொழில்களில் இணையும் வரை அரசாங்கத்தினால் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனினும் அண்மைக்காலமாக புகலிடம் கோரி செல்கின்றவர்கள் அதனை மாத்திரமே நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் தஞ்சம் அடைபவர்கள் மூன்று மாத காலம் வரை தங்கியிருக்க வேண்டும் எனவும் அதன்பின்னரே அரசாங்கத்தினால் சலுகைகள் வழங்கப்படும் என பிரித்தானியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

90,000 தற்காலிக அடையாள அட்டைகளை கையளிக்க தீர்மானம்-

தேர்தல்கள் செயலகத்தினால் விநியோகிக்கப்பட்ட 90,000 தற்காலிக அடையாள அட்டைகளை எதிர்வரும் தேர்தலை இலக்காகொண்டு மீண்டும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கு அமைய இந்த தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. மாகாண சபை தேர்தலுக்காக பல சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் செயலகத்தினால் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் தேவை ஏற்பட்டால் தேர்தல்களின் போது தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட செயற்றிட்டம் ஒன்றை ஆட்பதிவு திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட தேவையுடையோருக்கு தொழில் பயிற்சி-

விசேட தேவையுடையவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது இதற்கமைய மாவட்ட மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற பயிலுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவை பணிப்பாளர் அனுஷா கோக்குல குறிப்பிட்டுள்ளார். 18க்கும் 35க்கும் இடைப்பட்ட திருணமாகாத விசேட தேவையுடையோர் இந்த பாடநெறிக்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என சமூக சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் காயம்-

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்றுகாலை இராணுவ வீரர் ஒருவரின் ரி-56 ரக துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால், காயமடைந்த அந்த இராணுவ வீரர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியவேலன்குளம் பகுதியில்; அமைந்துள்ள 612ஆவது படைத் தலைமையகத்தின் இராணுவத்தளத்தில் கடமையாற்றும் லயன்ஸ் கோப்ரல் தரங்க (வயது 25) என்பவரே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் சிறுமியை துன்புறுத்திய தாய், சிறிய தந்தை கைது-

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்கேநபர்களை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். சந்தேகநபர்களை இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.