சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்ட் விசன் திட்டப்பணிப்பாளர் விஜயம்-

chulipuram kalvilaan pakuthikku world vision (5)வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அழைப்பின் பெயரில் 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை வலி மேற்கு பிரதேசத்தின் சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்விசன் அமைப்பின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று மற்றும் யாழ் மாவட்ட வேள் விசன் திட்டப்பணிப்பாளர் திரு அன்டனி ஆகியோர் விஜயம் மேறற்கொண்டனர். இப் பகுதியில் மக்கள் அன்றாடம்; குடிநீர் பெறுவதற்கு பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருவது அறிந்த விடயம். இவ் விடயும் தொடர்பில் மக்களது நிலையினை எடுத்து விளக்கவே இவ் விஜயம் ஏற்பாடாகி இருந்தது. முன்னதாhக அப் பகுதியில் பல காலத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட பிரதேச சபைக்கு சொந்த மான கினறுகள் பார்வையிடப்பட்டு அவை மக்கள் பயன் பாட்டிற்கு ஏற்றதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் பின்னர் கல்விழான் காந்திஜி சன சமூக கட்டிடத்தில் பயனாளிகளுடன் சந்திப்பு இடம் பெற்றது. இவ்நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது எமது வலி மேற்கு பிரதேச அபிவிருத்தியில் வேள் விசன் நிறுவனத்தின் பங்கு மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இந்த வகையில் 2015ம் ஆண்டின் இறுதியில் பிரதேசத்தில் நீர் தெடர்பில் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கிற்காக செயற்பட்டு வருகின்றேன். கடந்த ஆண்டில் கூட இவ் நிறுவனத்தினால் எமது பிரதேசத்தில் நீர்த்ததேவை பல வடிவங்களிலும் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வகையில் இவ் கல்விழான் பகுதியில் நீர் தொடர்பிலான தேவைகள் மற்றும் சுகாதாரம் தெடர்பிலான தேவைகள் நிறைவு செய்யும் பொருட்டே இத்திட்டம் இங்கு நடை முறைபபடுத்தப்பட உள்ளது. இத் திட்டத்திற்கு மக்களது ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்த்தில் இப்பகுதியில் முழுமையாக ஒர் சிறு கட்டனத்துடன் நீர் வினயோகமும் மலசல கூட வசதி அற்றவர்கட்கு மல சல கூட வசதியும் முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நான் இப் பிரதேச சபையின் தவிசாளராக பதவி ஏற்றது முதலாக ஏற்றத்தாழ்வற்ற அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டே செயற்பட்டு வருகின்றேன். இப் பிரதேச மக்கள் ஒவ் வோர் தவையும் முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பில் என்னால் இயன்றவரை நிறைவேற்றி உள்ளமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் குடியிருப்புகளுக்கு பிரதிநிதிகளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அழைத்துச் சென்று இன்றைய நிலைகளை எடுத்துக் காட்டியதை அடுத்து பிரதிநிதிகள் தமது திட்ங்கள் தொடர்பில் வெகு விரைவில் அறியத்தரப்படும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கினர்.

chulipuram kalvilaan pakuthikku world vision (2) chulipuram kalvilaan pakuthikku world vision (3) chulipuram kalvilaan pakuthikku world vision (4) chulipuram kalvilaan pakuthikku world vision (5)