மன்னாரில் முன்னாள் புலி உறுப்பினர் கொலை தொடர்பில் 6-பேர் கைது
இலங்கையில் மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் அரச ஊழியரான கிராமசேவகர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகம். அத்துடன், தடயவியல் ரீதியான முக்கிய சாட்சியங்களும் விபரங்களும் விசாரணைகளில் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் சாட்சிகள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும். ‘பல விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. சாட்சியங்களின் ஊடாக கொலைக்கான காரணம் பற்றிய தகவல்களை விசாரணைகள் முடிவடைந்ததும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும். அந்தப் பகுதியின் பிரதேச செயலாளர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும். இந்தச் சம்பவத்தில் எவர் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களின் பதவி நிலையையும் பாராமல் நாங்கள் கைது செய்வோம் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண பிபிசியிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜந்து மீனவர்கள் விடுதலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக 5 இந்திய மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பரவலாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டன.
இந்த விவகாரத்தில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு, அப்பீல் வழக்கின் செலவுக்காக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடந்த 8–ந் தேதி ரூ.20 லட்சம் அனுப்பி வைத்தது
இந்த நிலையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புக்கு எதிராக இலங்கை அப்பீல் கோர்ட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் மேல்–முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப் போது இந்தியா- இலங்கை இடையே உள்ள கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைச் சாலைக்கு மாற்ற ராஜபக்சே சம்மதம் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டதாக கூறபட்டது.
ஆனால் இந்த தகவல்கள் வெளிவந்து ஒரு வாரம் ஆகியும் அந்த மீனவர்கள் விடுதலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. விடுதலை குறித்து குழப்பமான சூழ்நிலையே நீடித்து வருகிறது. அவர்களின் விடுதலையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் 5 மீனவர்களையும் விடுதலை செய்யாவிட்டால் உயிரை விடுவோம் என்று அவர்களது மனைவிகள் கூறி உள்ளனர்.
இதனிடையே மீனவர் களின் விடுதலையை உறுதிப்படுத்த கோரியும், மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 6 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் 15 பேர் இன்று சென்னை சென்று. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசுவதற்காக மாலையில் அவர்கள் டெல்லி செல்கிறார்கள். நாளை வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசவுள்ளார்கள்.