அமைச்சு பதவிகளிலிருந்து சம்பிக்க, கம்மன்பில இராஜினாமா – ஜாதிக ஹெல உறுமய


untitledஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும்  தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சர் உதயன் கம்மன்பிலவும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்ககை எடுத்தல் உள்ளிட்ட 35 அம்சங்கள் அடங்கிய  கோரிக்கையை அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த போதிலும் அவற்றை நிறைவேற்றும் முடிவில் அரசாங்கம் இல்லை என தெளிவாகிறது. அரசாங்கத்திடம் தமது கட்சி முன்வைத்த கோரிக்களை நிராகரித்த நிலையில் தாம் இந்த முடிவை எடுத்ததாகவும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் அரசியல் சீரழிந்துள்ளதாகவும். இன்றைய தினம் முதல் மனிதாபிமான மீட்புப் பணிகள் ஆரம்பமாகும் எனவும். கொள்கைகளின் அடிப்படையில் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாகவும். அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஹல உறுமயவின் இந்த தீர்மானமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்கப்பட்ட பிறந்தநாள் பரிசாகும் என்று, கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமயவின்  மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது, சுமார் 4 மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சி இதனை உறுதி செய்தது.