ஜனாதிபதிக்கு நல்லாசி சிறப்புப் பூசை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்

mk06ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது 69 பிறந்தநாளையொட்டி பிறந்த தினமான நேற்று அவருக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. துரைச்சாமி குருக்கள் தலைமையில் விசேடமாக இந்துகுருமார்கள் வேதம் ஒதி ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி சிறப்புப் பூசைகளை முன்னெடுத்தனர். அத்துடன் துரைச்சாமிக் -குருக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து காளாஞ்சிகளையும் வழங்கி வைத்தார். இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோருடன் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜனாதிபதியின் இந்துசமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் இராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மாவும் உடனிருந்தார்.

mk02 mk06 mk09 mk10