நுவரெலியா   மாவட்டத்தில் 2,073 பேருக்கு 15 தற்காலிக முகாம்கள்

malyakamநுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 678 குடும்பங்களைச் சேர்ந்த 2073 பேர், இதுவரையிலும் தற்காலிக முகாம்களிலே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி தெரிவித்தார். நுவரெலியாவில் 218 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் – ஐந்து முகாம்களிலும், கொத்மலை பிரதேசத்தில் 190 குடும்பங்களை சேர்ந்த 741 பேர் – மூன்று முகாம்களிலும், வலப்பனை பிரதேசத்தில் 84 குடும்பங்களை சேர்ந்த 278 பேர் – இரண்டு முகாம்களிலும் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் 39 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் – ஒரு  முகாமிலும், அம்பகமுவ பிரதேசத்தில் 147 குடும்பங்களை சேர்ந்த 587 பேர் -நான்கு முகாம்களிலும் இன்னும் சிலர்  தங்களது உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். மொத்தமாக 15 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2,073 பேருக்கான நாளாந்த உணவு, கிராமசேவகர்கள் ஊடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்தும் நுவரெலியா மாவட்டத்தின் காலநிலை சீரற்ற நிலையில் காணப்படுவதால், இவர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும், காலநிலை முற்றாக சீரடைந்த பின்னரே இவர்களை சொந்த வீடுகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குமாரசிரி குறிப்பிட்டார்.

பண்டைய கால பிரபுத்துவ முறை வேதனையளிக்கிறது – வாசுதேவ நாணயக்கார

malayakam1பெருந்தோட்டத்தில் பண்டைய கால பிரபுத்துவ முறை இன்னும் வழகிலுள்ளமை மனவேதனை அளிக்கின்றது என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் விநியோக சேவை தனித்தனியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்தார். கெயார் சர்வதேசம், இலங்கை மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகம் இணைந்து ஒழுங்கு செய்திருந்த, ‘இலங்கை பெருந்தோட்ட சமூகத்தினரின் சேவை வழங்குதலை இலகுவாக்கல்’ தொடர்பான விளைவுகள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களை பகிரும் நிகழ்வு கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்து பகிர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  ‘பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் விநியோகச் சேவை தனித்தனியாக இடம்பெறுவதில்லை. இம்மக்களுக்கான தபால்கள் தோட்ட நிர்வாகத்தின் விலாசத்துக்;கே அனுப்பப்படுகின்றன. அதன்பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால்கள் வழங்கப்படுகின்றன. இது பிரபுத்துவ காலத்தையே நினைவூட்டுகிறது. தனியார் நிறுவனமொன்று, இத்தபால் விநியோக பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்வந்தது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சிடமும் சந்திப்புகளை அந்நிறுவனம் மேற்கொண்டது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. எனவே பெருந்தோட்டத்துறை அமைச்சும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு இம்மக்களுக்கு தனித்தனி தபால் விநியோகச் சேவையை வழங்குவதற்கு முன்வரவேண்டும். இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டத்துறை சமூகம் புறக்கணிக்கப்பட்ட சமூகமாகவே காணப்படுகிறது. எமது நாட்டின் வளர்ச்சிக்காக இச்சமூகம் பல அர்ப்பணிப்புகளையும் தியாகங்களை செய்துள்ளது. ஆனால், அத்தியாகங்கள் உணரப்படவில்லை. காலனித்துவ ஆட்சியின் பின்னர், தோட்ட நிர்வாகங்களை அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்றதன் பின்னர் சில தேவைகள் இம்மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட்டன. ஆனாலும், இம்மக்களின் பல்வேறு தேவைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளன.

இம்மக்கள் காணி பிரச்சினைகளை எதிர்கொண்;டவர்களாகவே உள்ளனர். பெருந்தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தோட்டங்களில் வேலைசெய்து ஓய்வூதியம் பெற்ற ஒருவருக்கு அந்த வீடு சொந்தமில்லாமல் ஆக்கப்படுகிறது  மற்ற சமூகத்துடன் ஒப்பிடுகையில் இம்மக்களின் வீடமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதனை தவிரவும் இம்மக்களுக்கு முறையான வீடுகள் அமைத்துகொடுக்கப்பட வேண்டும்.

  அம்மக்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் குடியிருக்கும் வீடுகள் முறையானதாக மாற்றப்பட வேண்டும். அவ்வீடுகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும். மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இம்மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.