வடமாகாண சபை 31சதவீத நிதியையே செலவு செய்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் 

veera01வடமாகாண ஆளுநர் அலுவலகமும், மூத்த பிரஜைகள் கழகமும் இணைந்து ஜனாதிபதியின் பிறந்தநாளில் முதியவர்களுக்கு உதவி பொருட்களை வழங்கும் நிகழ்வை நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தினர்.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில் அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது. ‘வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை உருவாகுவதற்கு முன்னர் வடமாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்துவிட்டு மேலதிக நிதியை அரசாங்கத்திடம் கோருவார்.  வடமாகாண சபை உருவாகிய பின்னர் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. ஏனெனில், வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 31 வீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது’;. ‘வடமாகாண சபையைப் பொறுத்தவரையில், மக்களுடைய பணியை நிறைவு செய்வதிலும் பார்க்க தமது சுய தேவைகளை நிறைவு செய்வதிலேயே அக்கறையாக செயற்படுகின்றனர். வடமாகாண ஆளுநர், மற்றும் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோர் தங்களுக்கு இடையூறாக இருக்கின்றனர் என அர்த்தமற்ற முறையில் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசாங்கம் வேறு மாகாணங்களுக்கு ஒதுக்கிய நிதியை விட அதிகளவான நிதியை வடமாகாண சபைக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால், வடமாகாண சபை அதனை உரிய முறையில் செலவு செய்யாது இழுத்தடித்து வருகின்றது. கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் ஒதுக்கப்பட்ட நிதியில் 31 சதவீதமானவையே செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதகாலத்தில் மிகுதி பணத்தை செலவு செய்ய முடியுமா? என்பதையிட்டு வடமாகாண சபையினர் சிந்திக்க வேண்டும். இதனால், வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி அரசாங்கத்திற்கு திரும்பி செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டினார்.

veera03veera10