Header image alt text

எதிரணி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன

maithripala_sirisenaஎதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி! நான் ஜனாதிபதியானால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவேன். 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்றும் அவர் கூறினார்.
*நாட்டின் அதிகாரம், நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில்.                                 *சட்டம் சீர்குழைந்துள்ளது.
*ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது.

*யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது.
*அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்.
*2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது.
*2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது.
*1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்.
*1974 – 1994 வரை சிறீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார்.
*சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது.
*வரலாறு எனக்கு தந்த பரிசு, ரணில், சந்திரிகா ஆகியோருக்கு நன்றிகள்.
*சிறீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த வேண்டும்.
*போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் சந்தித்தேன்.
*நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது, இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை.
*பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்.
*சகலதையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன்.
*நாட்டின் நிர்வாகம்
*அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
*அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும்.
*இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு.
*சுதந்திர தேர்தல் உரிமையை உருவாக்குவேன்.
*இது கூட்டமைப்பின் ஒரு முன்னணி.

மைத்திரிபால, ராஜித்த, துமிந்த மற்றும் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன பதவிநீக்கம்-

மைத்திரிபால சிறிசேன, ராஜித்த சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க மற்றும் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்தும், பொறுப்புக்களில் இருந்தும் அவர்களை நீக்குவதற்கு, கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் 8ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி-அமைச்சர் மைத்திரிபால சிறிசேன-

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று பிற்பகல் கொழும்பு நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டபோதே இவ்வாறு கூறியள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளபப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை-சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க-

மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மட்டுமல்ல பல காரணங்கள் உண்டு அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, அது இங்கு முக்கியமில்லை. கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்களுக்கு இடமாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுகின்றன. பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர். ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன். எந்த பதவியும் தேலையில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

பதவிகளை துறந்து மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க முன்வந்துள்ளோம்-ராஜித்த-

நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில் கொண்டு நான் எனது பதவிகளை துறந்து, மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க நாம் தற்போது முன்வந்துள்ளோம் என ராஜித்த சேனரத்ன தெரிவித்துள்ளார். புதிய நகரமண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது எதிரிகளுக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைக்கமாட்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில்கொண்டு நான் எனது பதவிகளை துறந்துள்ளளேன். இந்த தீர்மானத்திற்காக சிலர் எங்கள்மீது சேறுபூச நினைப்பார்கள். நான் அதனையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நான் எனது நாட்டு மக்களுக்காக வாழத் தயாராகவுள்ளளேன். நான் இதன்போது ஊடகவியலாளர்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகின்றேன். நீங்கள் பக்கச்சார்பற்ற நிலையில் நேர்மையாக உங்களுடைய சேவையை செய்ய வேண்டும். அப்போது தான் நீங்களும் வரலாற்றி;ல் இடம்பிடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையான செய்திகளை நீங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் அடக்கம்;-மைத்திரிபால சிறிசேன-

நாட்டின் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் சட்டம் சீர்குழைந்துள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் செல்கின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது. 1974 – 1994 வரை சிறீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார் போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் தாம் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன். சகல துறைகளையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன். நாட்டில் தற்போது நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது. அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.அத்துடன் அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியசரசின் 7ஆவது ஜனாதிபதித் தேர்தல்

3(226)இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியசரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியானது. பரப்பரப்பாக பேசப்பட்ட ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பிற்பகலில் இருந்த சுபநேரமான 1.18க்கு கைச்சாத்திட்டார்.
அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனத்தில் கைச்சாத்திடும்போது, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரி காமினி செனரத், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ ஆகியோரும் உடனிருந்தனர்.
மற்றொரு பதவிக் காலத்துக்காக  ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்ற பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டதையடுத்து அந்த பிரகடனம் தொலைநகல் ஊடாக தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி கைச்சாத்திடப்பட்ட செய்தி பரவியதையடுத்து நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதியை இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
1988ஆம் ஆண்டு 16ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் திருத்த சட்டத்தின் பிரகாரம் வர்த்தமானி வெளியான நாளிலிருந்து வேட்புமனுத்தாக்கல் 16 அல்லது 21 நாட்களுக்கு கோரப்படும் என்பதுடன் தேர்தல் 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்கு உட்பட்ட நாளொன்றில் நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2015இல்

imagesஜனாதிபதி  தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது குறித்த சந்தேகத்திற்கு விடைகிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி அரச அச்சகத்திற்கு ஜனாதிபதி கையொப்பமிட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது இரண்டாம் தவணைக்கான பதவிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையிலேயே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்இ சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.
எதிர்வரம் ஜனவரி மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதி தேர்தல் நடாத்;துவதற்கான திகதியை நிர்ணயிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Wasanthaஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக வெளியாகியருந்தன. அதனை உறுதிசெய்யுமுகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முக்கியஸ்தராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க  நேற்று (20.11.14) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். இவற்றின் தொடர்ச்சியாக  28 ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி வெளியில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
 
பொது எதிரணி வேட்பாளர்: இழுபறி நிலை

opposition_leadersஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தவணைக்கும் போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எதிரணிக் கூட்டமைப்பின் முயற்சிகள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன. மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய பொது வேட்பாளராக களமிறக்கப்படக்கூடியவர்கள் என்று பல தலைவர்களின் பெயர்கள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித்த தேரர் உள்ளிட்டோரின் பெயர்கள் இதுதொடர்பில் பல தரப்பினராலும் பிரேரிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, எதிரணியின் பக்கம் சாய்ந்து பொது வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. பிந்தி கிடைத்த செய்திகளின் படி மைத்திரிபால சிசேன பொதுவேட்பாளராக களம் இறங்கவிருப்பதாக தெரிகிறது. இவர் போட்டியிட்டால் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வாங்குகள் பிளவுபடும் வாய்ப்யும் மகிந்த ராஜபக்ச தோல்வியடைய வாய்ப்பும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏதிரணி வேட்பாளர் நிச்சயமான பின்பே அடுத்தகட்ட நிலை பற்றி அறியமுடியும். இருப்பினும் நாட்டில் குடும்ப ஆட்சிக்கு பலத்த எதிர்ப்பு உண்டு அதே நேரம் சிறீலங்கா சுதந்திரக்கட்சியை காப்பாற்றும் முயற்சியில் சந்திரிக்காவும் அக்கட்சியின் முக்கியத்தர்களும் முயற்சிக்கின்றார்கள் என்பதும் தெரிகின்றது.