வவுனியா வர்த்தக சங்க ஒழுங்கமைப்பில் கொஸ்லாந்த உறவுகளுக்கு நிவாரண உதவிகள்- (படங்கள் இணைப்பு)
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நேற்று (22.11.2014) சனிக்கிழமை வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.எஸ்.இராசலிங்கம் தலைமையிலான குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது. முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் திரு.எஸ்.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வர்த்தக சங்கத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் வாடி வீடு அதிபர் கதிர்காமராஜா(பூஸ்), புளொட்டின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு. சிவராசா இராசசிங்கம் (ராஜன்), கோவில்குளம் இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், கழக உறுப்பினர் திரு ந.தினேஷ் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர். Read more