கொஸ்லாந்த மக்களுடன் புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்திப்பு- (படங்கள் இணைப்பு)
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கொஸ்லாந்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நேற்று நேரடியாக கையளிக்கச் சென்றிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), புளொட்டின் நோர்வே கிளை அமைப்பாளர் திரு. சிவராசா இராசசிங்கம் (ராஜன்) உள்ளிட்ட பிரதிநிதிகள் மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.