பஸ் விபத்து இடம்பெற்ற பிரதேசத்திற்கு புளொட் தலைவர் விரைவு-(படங்கள் இணைப்பு)
கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்திருந்தனர். மாவனல்லை பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததினாலேயே இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. இவ் விபத்தில் பெண் ஒருவர் உட்பட நால்வர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பஸ் வண்டி வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கையிலேயே இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த மீரியபெத்த மக்களைப் பார்வையிட்டு உதவிகளை வழங்குவதற்காக நேற்று சென்றிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு உடன் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.