வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளரின் மறைவிற்கு இரங்கல்-

sivakumaranவலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் (மானிப்பாய்) தவிசாளராக இருந்த திரு. சிவகுமாரன் அவர்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (23.11.2014) இறைபதம் எய்தினார்.

தமிழ் தேசத்தினதும், தமிழ் தேசியத்தினதும் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் அச்சமின்றி உழைத்த பெருந்தகையார் கௌரவ தவிசாளர் திரு. சிவகுமாரன் அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

இந்த தேசத்தில் தமிழ் தேசியத்தை நசுக்கி விட வேண்டுமென்று எதிரிகள் எத்தனித்த வேளையில் 20011ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் துணிச்சலோடு களமிறங்கி வலி தென்மேற்கு மானிப்பாய் பகுதியினை தமிழ் தேசியத்தின்பால் ஈர்ப்பதில் அளப்பரிய பங்காற்றிய அன்னாரது செயற்பாடானது எமது இனத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், தமிழ் தேசியப் பற்றாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர்- வலி மேற்கு பிரதேச சபை.