வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளரின் மறைவிற்கு புளொட் தலைவர் இரங்கல்-

sivakumaranயாழ். வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளராக இருந்த நண்பர் திரு. சண்முகம் சிவகுமார் அவர்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (23.11.2014) காலமானார். நண்பர் சிவகுமார் அவர்கள் எனது தந்தையின் காலம் தொடக்கமே அரசியலில் மிகத் தீவிரமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியிலும் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காகவும் நன்றாக உழைத்தவர். இவர் எனது தந்தையுடன் தனிப்பட்ட நட்புடன் பழகி வந்தவர்; என்பதுடன், என்னுடனும் மிக நீண்ட காலமாக நட்பாகப் பழகியிருக்கின்றார். அவருக்கு தமிழ் தேசியத்தின்மீது இருந்த பற்றை நான் நீண்ட காலமாகவே அறிந்திருக்கின்றேன். அவருடைய இழப்பு மானிப்பாய் பிரதேசத்திற்கு மாத்திரமல்ல, தமிழ் சமூக்திற்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாருக்கு எனது இதய அஞ்சலியை செலுத்துவதுடன், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு தர்மலிங்கம் சித்தார்த்தன்

புளொட் தலைவர் (வடக்கு மாகாணசபை உறுப்பினர்)