வவுனியா வர்த்தக சங்க ஒழுங்கமைப்பில் கொஸ்லாந்த உறவுகளுக்கு நிவாரண உதவிகள்- (படங்கள் இணைப்பு)

koslanda (95)வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நேற்று (22.11.2014) சனிக்கிழமை வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.எஸ்.இராசலிங்கம் தலைமையிலான குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது. முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் திரு.எஸ்.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வர்த்தக சங்கத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் வாடி வீடு அதிபர் கதிர்காமராஜா(பூஸ்), புளொட்டின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு. சிவராசா இராசசிங்கம் (ராஜன்), கோவில்குளம் இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், கழக உறுப்பினர் திரு ந.தினேஷ் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர். இயற்கையின் சீற்றத்தால் உயிர்கள் உட்பட உடைமைகளையும் இழந்து சொல்லொணா துயரத்தில் வாடும் கொஸ்லாந்த மீரியபெத்த உறவுகள் தங்க வைக்கப்பட்டுள்ள மாகந்த தொழிற்சாலைக்கு முதலில் தமது நிவாரண பொருட்களுடன் சென்ற குழுவினர், அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியுடன் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 78 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களை அம்மக்களிடம் நேரடியாகவே கையளித்தனர். இதனைத் தொடர்ந்து தியகல, மீரியபெத்த போன்ற பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பூனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் உள்ள 72 குடும்பங்களுக்கான  நிவாரண பொருட்களை வர்த்தக சங்கத்தினரும் மற்றும் இணைந்த குழுவினரும் மக்களிடம் நேரடியாக கையளித்தனர். தொடர்ந்து மண்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்ட பூனாகல தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த 39 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் எதிரொலி விளையாட்டு கழகத்திற்கான பொருட்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக கையளிக்கப்பட்டது. இதேவேளை நேற்று 22.11.2014 மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கீழ்ப்புற லுணுகல தோட்டப் பிரிவைச் சேர்ந்த 58 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம், வர்த்தக சங்கத்தினர் மற்றும் இணைந்த குழுவினரால் நேரடியாக கையளிக்கப்பட்டது. இதேவேளை புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அடங்கிய குழுவினர், நீண்டகாலமாக அகதி முகாம்களில் தங்கியிருக்கின்ற மக்களுடைய அவல வாழ்க்கையினை நாம் நேரடியாக வடகிழக்கில் பார்த்து வருகிறோம். ஆகவே இந்த மக்களை எவ்வளவு விரைவாக மீள்குடியேற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக மீள்குடியேற்ற வேண்டுமென்று அம்பகமுவ பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

koslanda (1) koslanda (2) koslanda (3) koslanda (4) koslanda (5) koslanda (7) koslanda (8) koslanda (9) koslanda (10) koslanda (12) koslanda (15) koslanda (16) koslanda (17) koslanda (18) koslanda (19) koslanda (20) koslanda (21) koslanda (22) koslanda (23) koslanda (24) koslanda (25) koslanda (27) koslanda (28) koslanda (29) koslanda (30) koslanda (31) koslanda (32) koslanda (33) koslanda (34) koslanda (35) koslanda (36) koslanda (37) koslanda (38) koslanda (39) koslanda (40) koslanda (41) koslanda (42) koslanda (43) koslanda (44) koslanda (45) koslanda (46) koslanda (47) koslanda (48) koslanda (49) koslanda (50) koslanda (51) koslanda (52) koslanda (53) koslanda (54) koslanda (55) koslanda (56) koslanda (57) koslanda (58) koslanda (59) koslanda (60) koslanda (61) koslanda (62) koslanda (65) koslanda (66) koslanda (67) koslanda (68) koslanda (69) koslanda (71) koslanda (72) koslanda (73) koslanda (74) koslanda (75) koslanda (76) koslanda (77) koslanda (79) koslanda (80) koslanda (81) koslanda (82) koslanda (83) koslanda (84) koslanda (85) koslanda (86) koslanda (87) koslanda (88) koslanda (89) koslanda (90) koslanda (92) koslanda (94) koslanda (95) koslanda (96) koslanda (97) koslanda (98) koslanda (99) koslanda (100) koslanda (101) koslanda (102) koslanda (103) koslanda (104) koslanda (105) koslanda (106)