அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட டயகம மக்களுக்கு உதவி, மாணவர்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை உதவி-(படங்கள் இணைப்பு)

dayagama people  (15)நுவரெலியா தலவாக்கலை டயகம பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்காக வவுனியா வர்த்தக சங்கத்தினால் சேகரித்து வழங்கப்பட்ட உடுபுடவைகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு தலா 1500 ரூபாய் வீதம் 22 குடும்பங்களுக்கும் 33,000 ஆயிரம் ரூபாய் நிதியும் அந்த மக்களுக்கு உதவும் வகையில் நேற்றையதினம் (22.11.2014) புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் தலவாக்கலை சிறீ கதிரேசன் ஆலய மண்டபத்தில் வைத்து அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் திரு. பிரசாத் மற்றும் திரு. பாலமுரளி, திரு. திலகேஸ்வரன், திரு. விஜயகுமார், திரு. கெங்காதரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழீழ மக்கள் கழகத்தின் (புளொட்) ஜேர்மன் கிளைத் தோழர்களால் சேகரித்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா நிதிக்குரிய (100,000) காசோலையினை மலையகத்தில்; வறுமைக் கோட்டின்கீழ் வாழும், தமது கல்வியினைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதிருக்கும் பிள்ளைக்கு உதவும் வகையில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தலவாக்கலை சிறீ கதிரேசன் ஆலய மண்டபத்தில் வைத்து அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் திரு. பிரசாத் மற்றும் திரு. பாலமுரளி, திரு. திலகேஸ்வரன், திரு. விஜயகுமார், திரு. கெங்காதரன் ஆகியோரிடம் கையளித்துள்ளார். புளொட்டின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு. சிவராசா இராசசிங்கம் (ராஜன்) உள்ளிட்ட பிரதிநிதிகளும் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.

dayagama people  (2) dayagama people  (3) dayagama people  (5) dayagama people  (8) dayagama people  (9) dayagama people  (10) dayagama people  (11) dayagama people  (12) dayagama people  (15) dayagama people  (16)