இரு அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன-

therthal nadavadikkaiku arasa valankalaiஅங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.. “ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு” கட்சியின் எம்.பி.கெலனிமுல்ல நேற்று ராஜகிரியவிலுள்ள தேர்தல்களில் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரசேன தெரிவித்துள்ளார். ஜனசெத்த பெரமுணவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரரும் ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுககான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் எதிர்வரும் ஏழாம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.தே.க உறுப்பினர்கள் பொது வேட்பாளர் சந்திப்பு-

untitledபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தார். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர். இந்தநிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹ_னைஸ் பாருக், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொண்டார். ஏற்கனவே அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான அவர், இன்று அதிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். ஏற்கனவே நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தனித்து செயற்படவிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கும் வேலைத் திட்டம்-

janathipathiஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெறும் வன்முறைகளைத் தடுக்க பயனுள்ள வேலைத் திட்டம் ஒன்று அவசியம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் அதிரடிப்படை உத்தியோகத்தர் உயிரிழப்பு-

தெனியாய – கொட்டபொல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்துப்பாக்கிச்சூடு நேற்று இரவு 9.15அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முகாமில் பணியாற்றும் 24 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கடமையில் இருந்த மற்றுமொரு கான்ஸ்டபிளே துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தைச் சூழ இராணுவம்-

யாழ் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி, நேற்றையதினம் இரவு முதல் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பவள், கவச வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கப்பட்ட இராணுவத்தினர், அவ்வழியாக வாகனங்களில் சென்றோரை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் என்பன பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன் இராணுவத்தினர் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வெள்ளம்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப் பகுதியில் கடும் மழையுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் தீ விபத்து-

கோட்டை, சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் மருந்தகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். குறித்த தீயினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கானையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு-

25.11.2014 அன்று சங்கானையில் நடமாடும் பொலிஸ் நிலையத்தினை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தினர் திறந்து வைத்துள்ளனர் இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கனைப் பிரதேச செயலர் திரு ச.சோதிநாதன் மற்றும் சங்கானை வர்த்தக சங்க பட்டிண அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி நடமாடும் சேவையினை யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியேற்சகர் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

வலி மேற்கு பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழான வேலைத் திட்டங்கள்-

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்ட அமர்வு 10.11.2014ம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக கேட்போர் கூடத்தில் சபையின் கௌரவ தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது. கௌரவ தவிசாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று தனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டார். கௌரவ தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறுகையில் ஒரு மில்லியன் ரூபா திட்டத்தில் பின்வரும் வேலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார். Read more