இரு அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன-

therthal nadavadikkaiku arasa valankalaiஅங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.. “ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு” கட்சியின் எம்.பி.கெலனிமுல்ல நேற்று ராஜகிரியவிலுள்ள தேர்தல்களில் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரசேன தெரிவித்துள்ளார். ஜனசெத்த பெரமுணவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரரும் ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுககான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் எதிர்வரும் ஏழாம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.தே.க உறுப்பினர்கள் பொது வேட்பாளர் சந்திப்பு-

untitledபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தார். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர். இந்தநிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹ_னைஸ் பாருக், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொண்டார். ஏற்கனவே அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான அவர், இன்று அதிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். ஏற்கனவே நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தனித்து செயற்படவிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கும் வேலைத் திட்டம்-

janathipathiஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெறும் வன்முறைகளைத் தடுக்க பயனுள்ள வேலைத் திட்டம் ஒன்று அவசியம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் அதிரடிப்படை உத்தியோகத்தர் உயிரிழப்பு-

தெனியாய – கொட்டபொல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்துப்பாக்கிச்சூடு நேற்று இரவு 9.15அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முகாமில் பணியாற்றும் 24 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கடமையில் இருந்த மற்றுமொரு கான்ஸ்டபிளே துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தைச் சூழ இராணுவம்-

யாழ் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி, நேற்றையதினம் இரவு முதல் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பவள், கவச வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கப்பட்ட இராணுவத்தினர், அவ்வழியாக வாகனங்களில் சென்றோரை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் என்பன பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன் இராணுவத்தினர் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வெள்ளம்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப் பகுதியில் கடும் மழையுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் தீ விபத்து-

கோட்டை, சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் மருந்தகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். குறித்த தீயினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கானையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு-

25.11.2014 அன்று சங்கானையில் நடமாடும் பொலிஸ் நிலையத்தினை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தினர் திறந்து வைத்துள்ளனர் இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கனைப் பிரதேச செயலர் திரு ச.சோதிநாதன் மற்றும் சங்கானை வர்த்தக சங்க பட்டிண அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி நடமாடும் சேவையினை யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியேற்சகர் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

வலி மேற்கு பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழான வேலைத் திட்டங்கள்-

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்ட அமர்வு 10.11.2014ம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக கேட்போர் கூடத்தில் சபையின் கௌரவ தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது. கௌரவ தவிசாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று தனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டார். கௌரவ தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறுகையில் ஒரு மில்லியன் ரூபா திட்டத்தில் பின்வரும் வேலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

1.சங்கானை பஸ்தரிப்பிடம் அமைத்தல் மேற்படி பஸ் தரிப்பிடப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் சங்கானையை நகரம் ஆக்கும் நோக்கோடு கடைத் தொகுதி அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் முதல் அங்கமாக 4 மில்லியன் செலவில் பஸ்தரிப்பிடம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் நிறைவின் பின்னர் மேல் தளத்தில் கடைத் தொகுதி அமைக்கும நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி கிடைக்காத நிலையில் அத்திட்டம் முழுமை பெறாத நிலையில் அமைந்தது தற்போது கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இவ் பஸ் தரிப்பிடத்தினை முழுமையாக்கும் நடவடிக்கை மேற்கொள்வது என குறிப்பிடப்பட்டது. இவ் பஸ்தரிப்பிடம் பொதுமக்களுக்கு சௌகரியம் தரத்தக்கதாக அமைக்கப்படும். தற்போது எமது பிரதேசத்தினுடாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பேருந்து சேவை இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது என கூறப்பட்டது.

2.சுழிபுரம் சத்தியக்காட்டு சந்தை அமைத்தல் இவ் சந்தைப் பகுதியனது மிக நீண்ட காலமாக பயன் பாட்டிலுள்ள சந்தைப் பகுதியாகும். இதனுள் மரக்கறிச் சந்தை, மீன் சந்தை, இறைச்சிக் கடைகள் மற்றும் பலசரக்கு வியாகார நடவடிக்கள் அமைந்துள்ளது. இதற்கும் மேலாக பல காலமாக மேற்படி சந்தை புனரமைப்பு தொடர்பில் அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் அப்பகுதி மக்களுடனும் சந்தை வியாபாரிகளுடனும் பல முறை பேசப்பட்டுள்ளது. இவ் நிலையில் இச் சந்தை மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது.

3.சங்கானை பொதுநூலகம் அமைத்தல் சங்கானைப் பகுதியில் பிரதேச சபையின் நிதி மூலம் பொது நூலகம் புனரமைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் அதன் அடுத்த கட்ட நடடவடிக்கைகள் மிக முக்கியமான ஒன்றாகும்.சங்கானையை நகராக்கும் செயல் திட்டத்தில் அடுத்த கட்ட நகர்வாக இதனைக் குறிப்பிட முடியும். இதே வேளை இவ் நூலகத்தினை நவீன முறையில் மாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

4.சுழிபுரம் நவீன பொதுநூலகம் அமைத்தல் சுழிபுரம் பகுதியில் எமது சபைக்கு உட்பட்டதாக நூலகம் காணப்பட்ட போதும் அது முழுமையான வசதி கொண்டதாக அமையவில்லை. இவ் நிலையில் புதிய முழுமையான வசதி கொண்ட நூலகத்தின் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனை வடிவமைப்பது மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

5.வட்டுக்கோட்டை நவீன சிறுவர் பூங்கா அமைத்தல் வட்டுக்கோட்டை எமது பிரதேச சபையின் உப அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை உரிய முறையில் புனரமைக்கவேண்டி உள்ளது. இவ் சிறுவர் பூங்காவானது புனரமைக்கப்படுவதன் வாயிலாக பிரதேச சிறுவர்கட்கு பயனள்ளதாக அமையும்

6.அராலி நவீன ஆயர்வேத நிலையம் அமைத்தல் அராலிப் பிரதேசத்தில் உள்ள ஆயுள் வேத நிலையம் அதிக மக்கள் பயன்பெறும் ஒன்றாகவே அமைந்துள்ளது. இவ் நிலையத்தினை புனரமைப்பதன் ஊடாக மக்களுக்கான சேவையை மேலும் மேம்படுத்த முடியும் என கருதுகின்றேன்

7.சுழிபுரம் சத்தியக்காட்டு வீதி புனரமைத்தல் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்பட்டு பூர்த்தி அடையாத நிலையிலுள்ள இவ் வீதி புனரமைப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இப் பகுதி மக்கள் பல தடவைகள் இவ் வீதி புனரமைப்பு தொடர்பில் கோரிக்கைகள் பல முன் வைத்துள்ள நிலையில் இவ் வீதி புனரமைப்பபு மிக அவசியானது என்பதும் இப் பகுதியில் மக்கள் குடியமர்வு மிக அதிகமானது என்பதும் குறிப்பிடக் கூடியது

8.வட்டுக்கோட்டை தங்கோடை வீதி புனரமைத்தல் மிக நீண்ட காலமாக மக்கள் வேண்டுகோள் விடுத்த வீதி இவ் விடயம் தொடர்பில் இவ் வீதியினை மீள புனரமைக்க வேண்டிய நிலை உள்ளது

9.வட்டுக்கோட்டை கலட்டி வீதி புனரமைத்தல் மிக நீண்ட காலமாக மக்கள் வேண்டுகோள் விடுத்த வீதி இவ் விடயம் தொடர்பில் இவ் வீதியினை மீள புனரமைக்க வேண்டிய நிலை உள்ளது

10.சங்கானை ஓடக்கரை வீதி புனரமைத்தல் மிக நீண்ட காலமாக மக்கள் வேண்டுகோள் விடுத்த வீதி இவ் விடயம் தொடர்பில் இவ் வீதியினை மீள புனரமைக்க வேண்டிய நிலை உள்ளது

11.சுழிபுரம் பண்ணாகம் வீதி புனரமைத்தல் மிக நீண்ட காலமாக மக்கள் வேண்டுகோள் விடுத்த வீதி இவ் விடயம் தொடர்பில் இவ் வீதியினை மீள புனரமைக்க வேண்டிய நிலை உள்ளது

12.சங்கானை மழுவை வீதி புனரமைத்தல் மிக நீண்ட காலமாக மக்கள் வேண்டுகோள் விடுத்த வீதி இவ் விடயம் தொடர்பில் இவ் வீதியினை மீள புனரமைக்க வேண்டிய நிலை உள்ளது மேலும் பண்ணாகம் வீதி மூன்று கட்டங்களாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

சங்கானை மரக்கறி சந்தைக்கு அருகாமையிலுள்ள கடைத்தொகுதிகள் அமைத்தல் கௌரவ தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தெரிவிக்கையில் நிலையான வைப்பு நிதியிலிருந்து ஐந்து மில்லியன் ரூபாவினை பயன்படுத்தி சங்கானை மரக்கறி சந்தையில் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பது எனவும், இதன் மூலம் வியாபாரிகளுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தை மேற்கொள்வதற்கு வசதியாக அமையும் எனவும், நிலையான வைப்பிலிருந்து நிதியைப் பெறுவதற்கான அனுமதியை கௌரவ முதலமைச்சரிடமிருந்து பெற்றுக் கொள்வதெனவும் தெரிவித்தார். இதனை சபையினர் ஏற்றுக்கொண்டனர்.

சுழிபுரம் சத்தியக்காட்டு சந்தை புனரமைத்தல் மேற்படி வேலைத்திட்டமானது பெறுகை நடைமுறையின் கீழ் கடைக்கொள்ளல் முறையினை அடிப்படையாகக் கொண்டு, இவ்வேலைத்திட்டங்களை சனசமூக நிலையங்களின் ஊடாக மேற்கொள்ளவேண்டும்

சிறுவர் கழகங்கள் கௌரவ தவிசாளர் கௌரவ தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் தெரிவிக்கையில் வேள்ட் விசன் நிறுவனம் மூலமாக பின்தங்கிய சனசமூக நிலையங்களில் 18 சிறுவர் கழகங்களுக்கு மாதாந்தம் 1,000.00 ரூபாவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளது எனவும், அதே போன்று சபையும் இக்கழகங்களுக்கு தளபாடம், நூல்கள் கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் 1,000.00 ரூபாவினை நன்கொடையாக வழங்க வேண்டும் என சபையினரைக் கேட்டுக்கொண்டார்.

சனசமூக நிலையங்களை தரம் பிரித்துக் கொள்வதோடு, 2011ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட நன்கொடையை வழங்குவது எனவும், வருடாந்தம் ரூபா 216,000.00 சபை நிதியிலிருந்து வழங்குவதற்கும், சிறுவர் கழகங்களின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆவண செய்ய வேண்டும் எனவும், அவற்றின் முன்னேற்றகரமான செயற்பாட்டிற்கு பங்களிக்க வேண்டும் எனவும் சபையினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

39வது சாதாரண பொதுக் கூட்ட அறிக்கை  27.10.2014

1. தற்போது ரூபா 2000.00 தபால் செலவாக ஒதுக்கப்பட்டு செலவுசெய்யப்படுகின்றது.

2. 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 4 உபஅலுவலகங்கள் ரீதியாக செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. 3. சங்கானை மரக்கறி சந்தைக்கு அருகாமையில் அமைக்கப்படவுள்ள துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கான மதிப்பீடு ரூபா 34,170.00 தயாரிக்கப்பட்டு, இவ் வேலை சபையால் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

சங்கானை மரக்கறி சந்தைக்கு அருகாமையில் அமைக்கப்படவுள்ள துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கான மதிப்பீடு ரூபா 34,170.00 தயாரிக்கப்பட்டு, இவ் வேலை சபையால் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

காற்றினால் மின்சாரம் வழங்கல் கௌரவ தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் தெரிவிக்கையில் பொன்னாலை மற்றும் அராலி கிராமங்களுக்கு காற்றினால் மின்சாரம் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது என தெரிவிக்கப்பட்டது. இதனை சபையினர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இவ் விடயம் பற்றி மேலும் குறிப்பிடும் போது அராலி –கோட்டைக்காடு மற்றும் பொன்னாலைப் பகுதிகளில் Ventus Ceylon pvt ( limited) நிறுவனத்தினால் இவ் வேலைகள் மேற்கொள்ளப்படவதாகவும் குறிப்பிட்டார்.இவ் விடயத்தில் கொட்டைக்காட்டுப் பகுதியில் அமைய உள்ள காற்று மின் திட்டடத்தில் 7 மெகாவாட் மின்சரம் உற்பத்தி செய்யபபட உள்ளதாகவும் இது போன்றே பொனனாலைப் பிரதேசத்தில் அமைய உள்ள காற்று மின் திட்டத்தின் மூலம் 8 மெகாவாட் மின்சரம் உற்பத்தி செய்யபபட உள்ளதாகவும் இதனால் பிரதேச மக்களுக்கு நனமைகள் அதிகரிக்கும் எனவும் மேற்படி திட்டம் தொடர்பில் பிரதேச செயலர் மத்திய சுற்றடல் அதிகார சபையினர் குறித்த திட்டத்தினை ஆரம்பிக் உள்ள Ventus Ceylon pvt ( limited) நிறுவனத்தினர் அவர்களுடன் திட்டம் அமைய உள்ள இடங்களை நேரில் சென்று பார்த்ததாகவும் தெரிவித்தார்.

அராலி மாவத்தை விளையாட்டு கழகம் கௌரவ தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் தெரிவிக்கையில் பிரமாண அடிப்படையிலான நிதி மூலமாக ரூபா 200,000.00 மாவத்தை விளையாட்டு கழகத்திற்கு சிரமதானப் பணிக்காக கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அண்ணா விளையாட்டு கழகம் மற்றும் மாவத்தை விளையாட்டு கழகம் ஆகிய இரண்டு கழகங்களும் தற்போது பயன்படுத்துவதாகவும், இம்மைதானத்தில் சிறுவர் கழகங்கள் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதாகவும், இவ்விடயம் தொடர்பாக வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி குழுவில் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாவத்தை விளையாட்டு கழகம் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மைதானத்தைப் பயன்படுத்துவதாகவும், அண்ணா விளையாட்டு கழகம் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மைதானத்தைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்தாகவும், ஞாயிறுக்கிழமையை பொதுவாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி ஒவ்வொரு கழகங்களும் விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்துவதால் சபைக்கு ரூபா 1,000.00 வினை வரியாக செலுத்த வேண்டும் என சபையினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனுமதிக்கட்டணம் ரூபா 1,000.00 அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்தை அண்ணா விளையாட்டு கழகம் மற்றும் மாவத்தை விளையாட்டு கழகம் ஆகிய இரண்டு கழகங்களும் தவிர வேறு அமைப்புக்கள் தமது நிகழ்வுகளை நடாத்துவதாயின் சபையின் அனுமதியினை பெற்றுக்கொள்வதோடு, அனுமதிக் கட்டணமாக ரூபா 1,000.00 (VAT, NBT)சேர்த்து சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் சபையினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீர்த்தாங்கி கொள்வனவு(4000 லீற்றர்) கௌரவ தவிசாளர்; திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் தெரிவிக்கையில் தற்போது வறட்சி காணப்படுவதாலும், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டியுள்ளதாலும் நீர்த்தாங்கி கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு வேள்ட் விசன் ரூபா1.5 மில்லியன் வழங்குவதாகவும் மிகுதி சபைப்பங்களிப்புடன் 10மூஆக இருக்கவேண்டும் எனவும், இந்நிதியில் இரண்டு நீர்த்தாங்கிகளைக் கொள்வனவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை சபையினர் ஏற்றுக்கொண்டனர்.