தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவர் ஜ.தே.கவில் இணைவு

tதமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக செயற்பட் இராஜ குகனேஸ்வரன் ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்துகொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் டெலோ ஆகியவற்றில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளார். இவர் அண்மைக்காலமாக த.வி.கூ கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து அவர், இணைந்துகொண்டுள்ளார்.

எதிரணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிராச்சாரக் கூட்டம்

maithiபொலனறுவையில் இன்று தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள எதிரணியின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நாட்டிற்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அரசாங்கம் நாட்டிற்கு என்ன செய்தது என இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியதிட்டத்தை முன்னெடுப்பதாக உறுதியளித்த அவர. தான் பதவிக்கு வந்ததும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் கடன்களை இரத்துச் செய்வதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து தான் விலகியதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூனடறாவது தடவையாக பதவிக்கு வந்தால் அவர் நிச்சயமாக சர்வாதிகாரியாகவே விளங்குவார் என்றார்.
விடுதலைப்புலிகள் என்னை கொலைசெய்ய முயன்றனர் என குறிப்பிட்ட அவர் தற்போது தன்னை அரசாங்கம் புலி என்கிறது என்றார்.
நான் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்ய தயாராகவுள்ளேன், பதவிக்குவந்தால், எவரையும் பழிவாங்காமல் கௌரவமாக நடத்துவேன், என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

நைஜீரிய பள்ளிவாசல் தற்கொலைத் தாக்குதல்

nigeria_muslimattackநைஜீரியாவில் வடக்கே, கானோ நகரில் 29.10.14 வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல நூறு பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. வெள்ளிக்கிழமை வழமையான தொழுகை நேரத்தின் போது முதலாவது குண்டு கார் ஒன்றில் வைக்கப்பட்டு பள்ளிவாசலுள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களை நோக்கி ஓட்டிச் சென்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது மக்கள் அங்கிருந்து தப்பி வெளியில் வர முயன்றபோது இரண்டாவது, மூன்றாவது குண்டுகளும் வெடித்துள்ளன. Read more