வவுனியா நகரசபையும் பொது நூலகமும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழா- (படங்கள் இணைப்பு)
வவுனியா நகரசபையும் பொது நூலகமும் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் (29.11.2014) காலை 9.00 மணியளவில் நகரசபை கலாசார மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கௌரவ திரு.எஸ்.திருவாகரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா, வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன், புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயதிலக்க, வவுனியா பிரதேச சபைகளின் செயலாளர்கள், கலாநிதி தமிழ்மணி அகளங்கன் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தலைவர் சேனாதிராசா, வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் சந்திரகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், மற்றும் வாசகர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நகரசபை மற்றும் பொது நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர் கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் பாடசாலை, புதுவாழ்வுப் பூங்கா மற்றும் கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 14 பாடசாலைகளைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கு வங்கி கணக்குகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.