வவுனியா திருநாவற்குளத்தில் மாணவர்கள் கௌரவிப்பு, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு- (படங்கள் இணைப்பு)

Thiru (037)தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 50 மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று (31.11.2014)காலை 9.30 மணியளவில் வவுனியா திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா, கிராம சேவையாளர் திரு.கோணேஸ்வரலிங்கம், புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை முன்னாள் உபநகரபிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் திரு.க.சிவநேசன்(பவன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராஜசேகரம் (சேகர்) நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலய அதிபர் திருமதி. செல்வராசா கௌரிதேவி ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய அதிபர் திருமதி. திருவருள்நேசன், அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் திரு.கிருபாகரன், திருநாவற்குள பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ரத்னமால மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், புலம்பெயர்ந்த தமிழர்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினர் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வருகின்றார்கள். ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால், சிறுவர்களின் கல்வி வீதம் வளர்ச்சி காணவேண்டும். எமது தோழர் நாகராஜா வன்னி மண்ணுக்கு ஆற்றிவரும் சேவைகள் அளப்பரியது, அவரைப் போன்று ஏனைய புலம்பெயர் உறவுகளும் தங்களால் இயன்ற உதவிகளை சமூகத்துக்கு செய்ய முன்வர வேண்டும் அத்துடன் சமூகத்தில் இன்னும் பல நாகராஜாக்கள் உருவாகி சமூகப்பணியாற்ற வேண்டும் என்றார்.

அத்துடன், 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமானால், புலம்பெயர் உறவுகளின் உதவிகள் நிச்சயமாக தேவை. புலம்பெயர் உறவுகளின் உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மறுமலர்ச்சி, சிறுவர்களின் கல்வி வளர்ச்சியை பெற முடியும். நிகழ்காலத்தில் ஒரு அரசியல் தீர்விற்காக மீண்டும் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. யுத்தத்தால் பாதிக்கபட்ட போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு புலம்பெயர் உறவுகளின் உதவிகள் இன்றியமையாததாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வின்போது திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 2015ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

Thiru (001) Thiru (002) Thiru (003) Thiru (004) Thiru (005) Thiru (006) Thiru (007) Thiru (008) Thiru (009) Thiru (010) Thiru (011) Thiru (012) Thiru (12) Thiru (013) Thiru (014) Thiru (015) Thiru (016) Thiru (017) Thiru (018) Thiru (018.) Thiru (019) Thiru (019.) Thiru (020) Thiru (020.) Thiru (021) Thiru (022) Thiru (023) Thiru (23) Thiru (024) Thiru (024-) Thiru (025) Thiru (026) Thiru (027) Thiru (028) Thiru (029) Thiru (030) Thiru (031) Thiru (032) Thiru (033) Thiru (033.) Thiru (034) Thiru (035) Thiru (036) Thiru (037) Thiru (038)