வலி மேற்கில் விவசாய காணிகள் பாதுகாக்கப்பட்டது-
02.12.2014 அன்று மிக அதிக மழை காரணமாக வலி மேற்கின் பல பகுதிகளிலும் உள்ள குடியிருப்புக்களுக்குள்; வெள்ளம் புகுந்து கொண்டது. இதற்கும் மேலாக பல ஏக்கர் கணக்கான விவசாய நிலம் பாதிக்கப்பது. இவ் நிலையில் சங்கானை மற்றும் அராலி பகுதி விவசாய சம்மேளனங்கள் மேற்படி நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டி இப் பிரதேசத்திலுள்ள வான் கதவுகளை திறக்குமாறு சங்கானை பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர் இவ் நிலையில் மாலை வரை வான் ககதவுகள் திறக்கப்படா நிலையில் மேற்படி கதவுகளை மக்கள் தாமாகவே திறக்க முட்படனர் இவ் வியம் பற்றி வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கட்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தவிசாளர் மக்களின் நலன் கொண்டு சம்பவம் பற்றி உடனடியாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் நீர் பாசன பெறியியலாளருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய காணிக்ள் பாதுகாக்கப்பட்டது.
வலி மேற்கில் வீதி வேலைத் திட்டங்கள்
வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் மிக அண்மையில் குடியேறிய இடம் தான் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதி ஆகும். இப் பகுதிமக்கள் மிக நீண்ட யுத்தத்தின் பின் இப் பகுதியில் குடியேறினர். இப் பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் கடற்தொழில் மற்றும் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ் நிலையில் இப் பகுதி மக்களது நலன் கருதி வலி மேற்கு பிரதேச சபை இலவசமான முறையழல் குடிநீர் மற்றும் ஏனைய சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. இருந்தும் இப் பகுதி மக்களுக்கு செப்பனிடப்பட்ட வீதிகள் இல்லாமை தொடர்பில் பெரும் குறைபாடாக காணப்பட்ட நிலையில் தமக்கு வீதி அமைதது தரும் வண்ணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர் இவ் நிலையில் வட மாகாண சபை ஊடாக நிதி ஒதுக்கீடு இடம் பெற்று வீதி செப்பனிடும் பணிகள் வெகு மும்மரமாக அடம் பெறுவது குறிப்பிடக் கூடிய ஒன்றாக உள்ளது.