மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள், தேவைகள் குறித்து ஆராய்வு-

malaiyaal pathikapatta makkalin nilaimaikal (7)03.12.2014 அன்று வலி மேற்கின் பல பகுதிகளிலும் பெய்த கடும் மழைகாரணமாக மக்கள் பலரும் தமது குடியிருப்புக்களை விட்டு இடம்பெயாந்து அல்லல்படட்னர் இவ் வேளை முளாய் பகுதியிலுள்ள அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை காட்டுப்புலம் பாடசாலை, இன்பச்சோலைப் பகுதி மற்றும் அராலி ஐயனர் கோவில் பகுதிகளில் இந்த மக்கள் தஞ்சம் புகுந்தனர் இவ் நிலைமையை உடனடியாக வலிமேற்க பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரனுக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக தவிசாளர் அவ் விடத்திற்கு வருகை தந்து மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இவ் விடயம் குறித்து அறிந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ன உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் உடனடியாக மக்கள் தஞ்சம் அடைந்த இடத்திற்கு வருகை தந்தார். அவருடன் புளொட்டின் நோர்வே கிளை அமைப்பானர் திரு இராசசிங்கம் சிவராசா (ராஜன்) அவர்களும் வருகை தந்திருந்தார் இவ் நிலையில் அப்பகுதி கிராம சேவகர் சிறிரஞ்சன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களும் வந்திருந்தனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுடைய தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்கள்.

malaiyaal pathikapatta makkalin nilaimaikal (7)malaiyaal pathikapatta makkalin nilaimaikal (1)malaiyaal pathikapatta makkalin nilaimaikal (2)malaiyaal pathikapatta makkalin nilaimaikal (6)

 

 

அதிக மழையினால் மக்கள் பாதிப்பு, உதவி வழங்குமாறு கோரிக்கை-

கடந்த 1ம் திகதி முதலாக மிக அதிகமான மழை பெய்து வரும் மழைகாரணமாக பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்புக்கு உட்பட்டனர் இவ் நிலையில் வலி மேற்கு பிரதேசத்திலும் காணப்பட்டது இவ் நிலையில் மக்களை அனர்தப் பாதிப்பில் பாதுகாக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபையினர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தினர் இணைந்து மக்கள் பணியில் ஈடுபட்டனர். இவ் பணியில் பிரதேசத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மக்களுக்கான உதவும் பணிகளில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான உதவிகளை உடன் வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளருக்கு கோரிக்கை வித்துள்ளார்

கனகரத்தினம் வீதி செப்பனிடல், ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு-

மிக நீண் காலமாக செப்பனிப்படாது இருந்த வட்டுக்கோட்டை கனகரத்தினம் வீதி வட மாகாண முதமைச்சர் நிதி ஓதுக்கீடடினால் வலி மேற்கு பிரதேச சபையின் கீழ் புனரமைப்பு செய்யப்படுகின்றது மேற்படி வேலைத் திட்டத்ததினை வட்;டு தென் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக மேற்கொள்ளப் படுகின்றது மேற்படி வேலைத் திட்டத்தினை வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் நேரடியாக நின்று நெரடியாக நின்று வழிப்படுத்தி வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.இவ் வேலைத் தி;ம் தொடர்பில் வட்டு தென் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரையே கண்காணிப்பு குழுவாக நியம்க்கப்படுள்ளனர். வலி மேற்கு பிரதேசத்தில் நடை பெறும் வேலைகள் தொர்பில் கண்காணிப்பு குழுவை தவிசாளர் நியமித்து வருவது நடை முறையில் உள்ள விடயம் ஆகும் 05.12.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்தி அவர்களது பன்முகப்படுதப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா.50000 ஓலி பெருக்கி சாதனங்கள் வட்டுக்கோட்டை மாவடி அடைக்கலம் தோட்ட கந்தசுவாமி கோவில் நிர்வகத்திடம் ஒப்படைத்தார்.