வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி-(புளொட்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம் பெயர் உறவுகளான சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் நோர்வே நாடுகளிலுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தோழர்கள் உதவிகளை வழங்கியுள்ளனர். கடந்த 03.12.2014 புதன்கிழமை அன்று மூளாய் தேவாலயம், சுழிபுரம் காட்டுப் புலம், சுழிபுரம் பாண்டுவட்டை, வட்டுக்கோட்டை இன்பச்சோலை, முளாய் வீரவத்ததை தேவாலயம் மற்றும் கந்தரோடை முகாம் பகுதிகளில் தஞ்சம் அடைந்திருந்த சுமார் 1000 பேருக்கு .இரண்டு இலட்சம் ரூபா செலவில் உணவுப் பொதிகள், வெற்றுச் சாக்குகள் பால்மாவகைகள், நுளம்புத் திரிப்பெட்டிகள் மற்றும் மருநது வகைகள் என்பன இதன்போது வழஙகிவைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், புளொட்டின் நோர்வேகிளை அமைப்பாளர் இராசசிங்கம் சிவராஜா (ராஜன்) மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு மக்களுக்கான பொருட்களை வழங்கி வைத்திருந்தனர்.