தம்பசிட்டி சனசமூக நிலையத்திற்கு வட மாகாணசபை நிதியினூடாக தளபாட உதவி-

09யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட்டின் நோர்வே கிளை அமைப்பாளர் திரு. இராசசிங்கம் சிவராசா (ராஜன்) ஆகியோரும், தம்பசிட்டி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ப.சிவசுப்பிரமணியம் அவர்கள் உள்ளிட்ட சனசமூக நிலைய நிர்வாகத்தினரும், ஊர்ப்பெரியார் எஸ். ஆறுமுகம் அவர்களும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது கிராமத்தின் அபிவிருத்தி பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், நீர், நில வளங்களை உரியமுறையில் பயன்படுத்துதல், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பின்போது புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை நிதியிலிருந்து சுமார் 75,000 ரூபாய் பெறுமதியுடைய தளபாடங்கள் மற்றும் நூல்களை உரிய முறையில் பராமரிப்பதற்கான பெட்டகம் உள்ளிட்ட பொருட்கள் மேற்படி சனசமூக நிலையத்திற்கு வழங்கப்பட்டது. மேற்படி தளபாடங்களை சனசமூக நிலையத் தலைவர் திரு. ப.சிவசுப்பிரமணியம் அவர்கள் உட்பட சனசமூக நிலைய நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.

0102030504060708