நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இன்றுபோல் அன்று எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை- சந்திரிக்கா

Maithribalaநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இன்றைக்கு கிடைத்திருக்கும் ஆதரவு அன்றைக்கு எனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவ்வாறு கிடைத்திருந்தால் அதை அன்றே நீக்கியிருப்பேன்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவே எனது ஒற்றை கண்ணை தான் இழந்தேன். அத்துடன் இன்றைக்கு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வந்துள்ளது அன்று அவ்வாறு யாரும் ஒத்துழைக்கவில்லை. அவ்வாறு ஒரு இணக்கமான சூழல் வாய்த்திருந்தால் நிறைவேற்று அதிகாரத்தை அன்றே ஒழித்திருப்பேன். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை. எனக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தால் ஆபத்து நேரும் என்று அறிந்திருந்திருந்தேன். நான் அன்று அவ்வாறு நினைத்தது இன்று நடந்துகொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய சந்திரிக்கா பண்டார நாயக்கா இன்றைய சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து இதனை செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள் – சீ.பி.ரட்ணாயக்க 

untitledஇந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள். அந்த வெற்றியில் மலையக மக்களும் பங்காளிகளாக இருப்பார்கள் என்பதில் எவ்வித ஜயமுமில்லை என சிறீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் தனியார் போக்குவரத்து துறை அமைச்சருமான சீ.பி.ரட்ணாயக்க நுவரெலியா மாவட்ட வலப்பனை தேர்தல் தொகுதிக்காக இராகலை நகரில் தேர்தல் காரியாலயத்தை வியாழக்கிழமை(11)  திறந்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில்;- இன்று எமது நாட்டின் அபிவிருத்தியை பார்க்கின்றபொழுது எந்த ஒரு சக்தியாலும் ஜனாதிபதியை வெற்றி கொள்ள முடியாது. அந்த அபிவிருத்தி சமமாக மலையகத்திற்கும் வந்தடைந்துள்ளது. ஒரு நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் அந்த நாட்டில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். கடந்த 10 வருடங்களில் அந்த அபிவிருத்தி சிறப்பாகவுள்ளது. அதுவும், மலையக மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் அவர்களின் பாதைகளும் இன்னும் பல அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் ஜனாதிபதி வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் நின்று, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். எமது நாடு சுதந்திரம் அடைந்த பின்பு அபிவிருத்தியில் பாரிய மைல்கல்களை எட்டியுள்ளது என்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இயங்கும் இந்த அரசாங்கத்தில்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. பல சர்வதேச நாடுகள் எமக்கு எதிராக செயல்பட்ட பொழுதிலும் அந்த சவால்களை முறியடித்து அபிவிருத்தி  பாதையில் இந்த நாட்டை கொண்டு செல்லக்கூடிய அனைத்து திறமைகளும் மஹிந்தவுக்கே உண்டு என அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தை நிறுத்தாமல்விட்டிருந்தால் தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள்- கருணா

imagesCAUUEEZSயுத்தத்தை அப்போது தான் நிறுத்தாமல் விட்டிருந்தால், இப்போதுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள் என்று ‘திவிநெகும’ திணைக்களத்தின் ‘செழிப்பான இல்லம்’ எனும் செயற்றிட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பயனாளிகள் வீடுகளை  திருத்துவதற்கான  2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு  வழங்கும் நிகழ்வு, திக்கோடை கணேச வித்தியாலயத்தில் புதன்கிழமை(10) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். ‘2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, தமிழ் மக்களுக்காக ஒஸ்லோவுக்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை  நடத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடத்தியபோதிலும்,  இறுதியில் எதுவும் நடைபெற்றதாக இல்லை. இந்த நிலையில் நானே உணர்ந்து யுத்தத்தை நிறுத்தினேன். நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள். இப்போதுள்ள அரசாங்கத்தை பலப்படுத்தி நாங்கள் அனைவரும் நன்மை அடையவேண்டும். இந்த விடயத்தில் எமது தமிழ் மக்கள் மிக கவனமாக சிந்தித்துச் செயற்படவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், ஆளும் கட்சியில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கிவிடலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 60,000 வாக்குகள் கிடைத்தன. இவை இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளாகும். கடந்த தேர்தல்களில் எதிர்த் தரப்புக்கு எமது மக்கள்  வாக்களித்தது போலல்லாமல், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொண்டுவருகின்றோம். அதுபோன்று,  இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திவிநெகும திணைக்களத்தின் ஊடாக திவிநெகும திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தினூடாக குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதிகள், தொழில் உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர,  இந்த மாவட்ட மக்களின் நலன் கருதி ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ், 24 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நனசல திட்டத்தின் கீழ் 14 பாடசாலைகளும் இதை விட, மஹிந்தோதைய திட்டத்தின கீழ் 5 பாடசாலைகளும் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. நீர்ப்பாசன வசதி, உரமானியம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு உட்பட இம்மாவட்ட மக்களின் அனைத்து விடயங்களுக்கும் இந்த அரசு உதவுகின்றது. கடந்த 5 வருடங்களினுள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினூடாக மாத்திரம் 61 கோடி ரூபாய் நிதி இப்பிரதேச அபிவிருத்திகளுக்காக செலவாகியுள்ளது. இதனை விட மின்சாரம், நீர்ப்பாசனம் போன்றவற்றுக்கு  விசேட திட்டத்தினூடாக பல கோடிக்கணக்கான நிதி இப்பிரதேசத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.