மஹிந்த ராஜபக்ஷவின், முதலாவது பிரசாரக் கூட்டம், அநுராதபுரத்தில்

mr03mr06எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின், முதலாவது பிரசாரக் கூட்டம், அநுராதபுரத்தில் சல்காது மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி
அரசாங்க தரப்பிலிருந்து எவரையேனும் எதிர்க்கட்சிக்கு எடுத்தால், அங்கிருந்து எவரையேனும் நானும் எடுப்பேன். நான் நினைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் எடுப்பேன். அதற்கு ஒருகோப்பை தேநீரே போதுமானது. திஸ்ஸ அத்தநாயக்கவை எடுக்கவும் ஒரு கோப்பை தேநீரே தேவைப்பட்டது என்று தெரிவித்தார்.
தொடர்ந்தும் எங்களுடைய தரப்பிலுள்ளோரை எடுப்போம் என்று கூறி மக்களைக் குழப்ப வேண்டாம்’ என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார்.
யுத்தம் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருகின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு தம்மிடம் கடிதம் மூலமாக கோரியிருந்ததார்கள். எமது படையினர் எந்தவொரு சிவிலியனையும் படுகொலை செய்யவில்லை. யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டின் அடிப்படையில் படையினரை ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த சிலர் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறார்கள்.
2005ம் ஆண்டு முதல் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுளன தொடர்ந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.