திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஒளிவிழா நிகழ்வு 12.12.2014 காலை தொடக்கம் கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி கே.மீரா தலைமையில் நடைபெற்றது. (இவ் முன்பள்ளியானது 1995 ஆம் ஆண்டு அமரர் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டது.) இந்நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன்(விசு) பிரதம விருந்தினராகவும் மேலும் இந் நிகழ்வில் முன்னாள் உப நகரபிதாவும் புளொட்டின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சிறப்பு விருந்தினராக தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு எஸ்.கோணேஸ்வரலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சு.ஜெகதீஸ்வரன்(சிவம் புளொட்;), புளொட் உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன், திருநாவற்குள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, ஆசிரியர் ரகுபதி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் சர்மா, மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், கிராமச்சங்க உறுப்பினர்களும் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் மழலைகளின் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் புளொட் சமூக ஆர்வலர் தோழர். திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களின் அனுசரணையில் பெற்றோர் தின மற்றும் ஒழி விழா நடைபெற்றது இவ் நிகழ்வில் மழலைகளின் கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. எமது தேசத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளான காவடி, கரகாட்டம் மற்றும் பாடல்கள், சிறப்பு பேச்சுக்கள் என பல நிகழ்வுகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி .லிங்கநாதன் தனதுரையில்.- திருநாவற்குளம் கிராமமானது 1990 ஆண்டு இடம்பெயர்ந்து வந்த எமது மக்களை த.ம.வி. கழகத்தினராகிய நாம் குடியேற்றிய கிராமமாகும். இது போன்று பல கிராமங்கள் த.ம.வி.கழத்தினராகிய எம்மால் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கிராம மக்களுக்கு நாம் பல வழிகளிலும் அபிவிருத்தி உதவிகளை செய்தபோதும் காணி தொடர்பான தீர்வினை இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை, விரைவில் வடமாகாண முதலமைச்சர் அவர்களையும் ஏனைய அமைச்சர்களையும் இப்பகுதிக்கு வரவழைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்படும் எனவும் கூறினார். மேலும் கூறுகையில் இக்கிராம மக்களின், சிறார்களின் வளர்ச்சிக்காக 2015 ஆண்டு மாகாணசபை நிதியில் இம் மண்டபத் திருத்தத்திற்காக ரூபா 200000.00 நிதியும் உமாமகேஸ்வரன் முன்பள்ளிக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் மேலும் திருநாவற்குள விளையாட்டு மைதானத்தினை நவீனரக விளையாட்டு மைதானமாகவும், இப் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றினையும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்ததோடு. எமது விடுதலை போராட்டத்தில் இணைந்து தமதுயிரை, அவயவங்களை, உடமைகளை இழந்த எமது கழக மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்காக உமாமகேஸ்வரன் நற்பணி மன்றம் ஒன்றை உருவாக்கி உள்ளுர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் எமது தோழர்கள், நலன்வரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் உதவிகளை பெற்று விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்,