ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் இதுவரை இல்லை – மாவை சேனாதிராஜா

mavaiஇலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா வன்னி இன் விருத்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடயங்களையும் கலந்துரையாடடி இருந்தோம். பல மாவட்டங்களிலும் இருந்து வந்த எமது உறுப்பினர்களின் அபிவிப்பிராயங்கள் எம்மால் கோரப்பட்டு கருத்து ஆராயும் கூட்டமாக இடம்பெற்றிருந்தது. இதன்போது அவர்களது கருத்துக்கள் ஒருமித்ததாக இருந்தது. ஆனால் அந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு தீர்மானமாக எடுக்கவில்லை. எங்களுடைய இந்த கருத்துக்களை ஒருமித்து தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு ஆராய்ந்து பொருத்தமான சிபாரிசை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கும். தமிழ் தேசியக்கூட்டமைப்புதான் உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும் . இதன்போது ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளீகளா? என கேட்டபோது, நாம் அவ்வாறான ஒப்பந்தங்களை செய்யவில்லை என்பதனை திட்டவட்டமாக சொல்ல விரும்புகின்றேன் என தெரிவித்திருந்தார். இதன்போது மறைமுகமாக தமிழ் தேயக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என கேட்டபோது, அவ்வாறு யாரும் பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னதாக இல்லை. ஆனால் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தைதான் அவர்கள் வெளிப்படுத்தியதாக அறிகின்றோம். இன்றைய கூட்டத்திலும் எல்லோரும் வாக்களிப்பதற்கு வற்புறுத்தவேண்டும் என்ற கருத்தும் தரப்பட்டுள்ளது. அது மட்டுமே தற்போதைக்கு உள்ள கருத்தாக இருக்கும். கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தனின் இந்திய விஜயம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்வதாக இருக்குமா? என கேட்டபோது, இது பரிதாபகரமான நிலை. அவர் ஏற்கனவே செய்து கொண்ட சத்திரசிக்கசைக்காக வருடாந்தம் சிக்சிச்சை பெற மருத்துவர் கூறியதற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளார். மாறாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டில்லி சென்று பேச வேண்டிய தேவை தற்போதைக்கு ஏற்பட வில்லை. அவர் மிக விரைவாக வந்துவிடுவார் என தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தீர்மானம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் பா. உ சீ.யோகேஸ்வரன்

yogesதமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள யோகேஸ்வரன், ராமேஸ்வரத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போது எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தெரிவித்த கருத்து. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள். வேட்பாளர்கள் தங்களது தேர்தல் கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களை புறக்கணிக்காது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வட மாகாண சபையின் முதலமைச்சர் அதிகாரமற்ற நிலையில் ஆட்சி நடத்தி வருகின்றார், அதிகாரங்கள் ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தமிழ் மக்கள் தொடர்ந்தும் உரிமைகளுக்காக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் – சுசில் பிரேமஜயந்த

mahinda-maithriஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில்; இணைந்து கொண்டவர்களின் வாக்குகளை கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவுவார் என சிலர் தப்புக் கணக்கு போடுவதாகவும் ஆளும் கட்சியிலிருந்து விலகியவர்களின் வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவின் கணக்கில் சேர்க்க முடியாது. சில ஊடகங்களின் எதிர்வுகூறல் பிழையானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவே கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளதாகவும் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் எதிராகவே செயற்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரணில்

imagesCAV8YTCBதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நாட்டின் சாதாரண சட்டங்களுக்கு அமைய சட்ட நடவடிக்கை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்   இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய புலனாய்வுத் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனை விசாரணை செய்ய அண்மையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் சர்வதேச காவல்துறையினரின் உதவியை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – பிரித்தானியா

imagesCAD2KKY8தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்தது. ஐரோப்பிய நீதிமன்றின் தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு தடைப் பட்டியலிலிருந்து புலிகள் இயக்கம் நீக்கப்பட்டது. எனினும், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்மானம் புலிகளுக்கு எதிரான பிரித்தானிய தடை உத்தரவில் மாற்றம் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளுர் சட்டங்களின் அடிப்படையில் தடை தொடர்பான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 மாம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை கிழக்கிலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு

wellயாழ். தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், தெரிவித்தார். குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து 13.02.14 சனிக்கிழமை சுகாதார பரிசோதகர், சுகாதார தொண்டர்களுடன் சென்று கிணறுகளை பார்வையிட்டுள்ளோம். இப்பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக வலி. வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்துள்ளோம். அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.