சிறைக்கைதிகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு-

ethir katshiyai ilakkuஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில், சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான கெபே தெரிவித்துள்ளது. மாத்தறை, கம்புறுபிட்டியவில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கான, மேடை நிர்மாணம் மற்றும் அலங்கார பணிகளுக்காக காலி சிறைச்சாலையைச் சேர்ந்த 44 சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கு நீல நிற காற்சட்டை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் கெபே குறிப்பிட்டுள்ளது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியாவார். அவர், கொமியுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரே. இந்நிலையில், கம்புறுபிட்டியவில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டத்துக்காக சிறைச்சாலையின் வாத்தியக்குழு, சிறைச்சாலை பஸ், சிறைச்சாலைக்குச் சொந்தமான கொடிக் கம்பங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன என கபே சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சிறைச்சாலை கைதிகள் ஈடுப்படுத்தப்பட்டுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பும் கூறியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 6ஆவது நிபுணர் நியமனம்-

anaiகாணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவுக்கு, மற்றுமொரு சர்வதேச நிபுணரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். முன்னாள் சர்வதேச நீதிபதியும் ஜப்பானைச் சேர்ந்தவருமான மொடூ நோகுச்சி என்பவரே ஆறாவது நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேலைத்தேய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து இதுவரை 6 நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்மென்ட் டி சில்வா, ஜோவெரி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன், அவ்தாஷ் கௌஷால் அஹ்மிர் பில்லாஹ் சூவ்பி மற்றும் நீதிபதி மொடூ நோகுச்சி ஆகியோரே இந்த அறுவர் ஆவர். இந்த ஆணைக்குழு, கடந்த 2004ஆம் ஆண்டு சட்ட அம்சங்கள் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாகாணசபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அரசுடன் இணைவு-

tissaஐக்கிய தேசியக்கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினரான ஜனக்க திஸ்ஸ குட்டியாராச்சி இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்காகவே இவர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளார். இதனையடுத்து, இன்று முற்பகல் அலரிமாளிக்கைக்குச் சென்ற இவர், தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துக்களை மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்ததுடன், ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளார். கடந்த மாகாண சபை தேர்தலின்போது, திஸ்ஸ குட்டியாராச்சி 18,265 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்-

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்றையதினம் நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் உறவினர்களும், மீனவ சங்கங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் விடுதலையின் பொருட்டு பலசுற்று பேச்சுவார்த்தைகள், இலங்கை அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்த போதிலும் எந்த முன்னேற்றமும் இது வரையில் ஏற்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நிறைவு பெற்றதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்-

busகட்டுநாயக்க – கொழும்பு வீதி அதிசொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுகாலை தொடக்கம் வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் பஸ்கள் எவரிவத்த பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கின்றன. எனவே சொகுசு பஸ்களுக்கும் விமான நிலைய வளாகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 5 லட்சம் பேர் தகுதி-

தபால் மூலம் வாக்களிக்கவென வாக்காள் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால் வாக்காள் அட்டைகள் அடங்கிய பொதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவத்தாட்சி அலுவலகம் ஊடாக அரச நிறுவனங்களுக்கு வாக்காள் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 லட்சத்து 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் பதவிகள் பறிப்பு-

nuvereliaநுவரெலியா பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிபோவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்ட ராமையா மலர்வாசகம், கதிர்வேல் கல்யாணகுமார் ஆகியோரின் பதவி பறிபோவதாக தேர்தல் ஆணையாளர் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளாரென அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி தாவிய இவ்விருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததாகவும் வழக்கின் முடிவு கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குழுவிற்கு சாதகமாக அமைந்துள்ளதெனவும் லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள இரண்டு பிரதேசசபை உறுப்பினர்களுக்கு பதிலாக காளிமுத்து பரமசிவம், அருணாசலம் நல்லமுத்து ஆகிய இருவரையும் நியமிக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது என செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.