நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை சரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டான தேர்தலாகையால் தமிழ் மக்கள் தமதுதெரிவில் மிககவனத்துடன் செயற்படவேண்டும். கடந்த தேர்தல்களில் குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போதுதமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்துகொண்டுதமிழ் மக்களைஅவர்களின் இஸ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது.
கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் நடந்த தவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியைகூட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் இப்போது மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுடன் பேசுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொருநபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களே என்பதையும் அனைவரும் அறிவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சுயநலமும் பதவி ஆசையும் பெருமளவு ஆட்கொண்டுள்ளமையால் மக்களை வழிநடத்தும் தகுதியையும் அவர்கள் இழந்துவிட்டனர். அத் தலைவர்களில் அநேகர் தமதுநிகழ்ச்சி நிரலின்படியேசெயற்படுவதோடு தமதுஎதிர்காலம் பற்றிய கனவுடனேயும் தமதுகட்சிகளின் எதிர்காலம் பற்றிய நினைவுகளுடனேயே இருக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில புத்தி ஜீவிகளுக்கும், அனுபவசாலிகளுக்கும் பஞ்சமில்லை. மக்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கவும் திறமையான தலைமையை தகுதியுள்ள பலர்ஏற்க தயாராக உள்ளனர். தற்போதைய தமிழ் தேசியகூட்டமைப்பில்; இரண்டு மூன்று நபர்களை தவிர ஏனையோர் வெறும் ஆமாம் போடுபவர்களாகவே உள்ளனர். முக்கியமுடிவுகளை அந்த இரண்டு மூன்றுபேர்மாத்திரமே எடுக்கின்றனர். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இவர்களுடைய முடிவுகளை ஒழுங்காக பத்திரிகைகளில் எழுதுவதோடு அம்முடிவுகளை திரும்பதிரும்ப மிகைப்படுத்திவருகின்றனர். இலகுவாக வேலை செய்யமுடியும் என்பதால் ஆமாம் போடுகின்றவர்களை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தகுதியானவர்களிடம் ஆலோசனை பெற்றுகாலம் கடத்தாது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுயல வேண்டும்.