யாழ்.. புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று (19.12.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை நிதியிலிருந்து 30,000 ரூபாய் பெறுமதியுடைய தளபாடங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு கெங்கா அவர்கள் உள்ளிட்ட சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வின்போது நலன்விரும்பிகள் சிலரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களும் இக்கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டது. திரு. கெங்கா அவர்களின் ஏற்பாட்டில் இதற்கான நிதி சேகரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் விடுமுறை நிறைவடைந்து மீண்டும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்பதாக இப்பிள்ளைகளுக்குத் தேவையான மேலும் பல உபகரணங்களையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் மாணவர்களும், பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் என பலரும் பங்கேற்றிருந்தனர்.