கோண்டாவில் கிழக்கில் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-
யாழ். கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக் கழகத்தினது உயர்த்தும் கரங்கள் செயற்பாட்டின் ஊடாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கிராமத்தின் வறிய மாணவ, மாணவியர்க்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (21.12.2014) இடம்பெற்றது. ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ம. சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் சனசமூகநிலைய மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திரு. இ.கெங்காதரன் அவர்களும் சமூக சேவையாளர் திரு. ஜெயக்குமார் அவர்களும் மேலும் பல இளைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.