ஜனாதிபதியின் ‘மகிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’ வெளியீடு-

mahindaபுதிய அரசியலமைப்பு பிரவேசத்திற்கு தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ‘மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’ என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளர். ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அங்கு உரையாற்றினார், இதன்போது அவர், இலங்கை அரசியல் வரலாற்றில் தேர்தல் வாக்குறுதி என்பது சில மாதங்களில் மறந்துபோகும் ஆவணம் மாத்திரமே. மஹிந்த சிந்தனை என்பது அவ்வாறு மறந்துப்போகும் ஆவணம் அல்லவென்பதை நாம் நிரூபித்துள்ளோம். நாம் கூறுவதை செய்வோம். செய்வதையே சொல்வோம். புதிய நாடொன்றை உருவாக்குவதற்கு தேவையான மக்கள் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு எம்மால் முடிந்துள்ளது. அரச சேவையை சீர்குலைக்கும் நாட்டை நோக்கி நாம் பின்னோக்கி நகர முடியாது. நாம் ஆரம்பித்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களை நிறுத்த முடியாது. அந்தப் பொறுப்பு என்னிடம் உள்ளது. நாட்டிற்கு துரோகம் இழைக்கும் ஒரு உடன்படிக்கையிலேலும் நான் கைச்சாத்திடவில்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். என்னிடம் பல உடன்படிக்கைகள் கிடையாது. என்னிடம் ஒரு உன்படிக்கையே உள்ளது. அதுவே மஹிந்த சிந்தனை. சட்டவாட்சியை வலுப்படுத்துவது, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு தேவையான நிர்வாக கட்டமைப்பு போன்றே நல்லாட்சி குறித்து அதில் உள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம், பரங்கியர் உள்ளிட்ட அனைவருக்கும் அபிவிருத்தியின் நற்பயன்கள் கிடைக்கக்கூடிய வகையில் தேசிய அபிவிருத்தியை விரிவாக்குவதே எனது முதன்மையான கடமையாகும். மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி எனது மூன்றாது தேர்தல் விஞ்ஞாபனத்தின் நோக்கமும் அதுவேயாகும். அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பேசப்படுகிறது. மகா சங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் தொழிற்சங்க தலைவர்களின் பங்களிப்பை பெற்று நான் புதிய அரசியல் அமைப்பு பிரவேசத்திற்கு செல்ல நான் தயார். அதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன். நாட்டை ஸ்திரத்தன்மையோடு முன்னெடுத்துச் செல்வோமா? ஸ்தரமற்ற நாடாக மாற்றுவோமா? இந்தக் கேள்வியை உங்கள் இதயத்திடம் கேட்குமாறு கோருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.