18.12.2014 அன்று அராலி பகுதியில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை அப் பகுதி மக்களுக்கு வழங்குவது தொர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினார் இதேவேளை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்குரிய உள்ளுராட்சி வார நிகழ்வுகள் 21.12.2014 அன்று வலி காமம் மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகம் முன்பாக வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் மற்றும் துவிச்சக்கரவண்டி ஓட்டம் என்பன இடம் பெற்றது. தொடர்ந்து உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் கரப்பந்தாட்டம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.