ஆனைக்கோட்டை மூத்த பிரஜைகள் சங்கத்தின் தண்ணீர் தாங்கி அமைப்பதற்கு உதவி- (படங்கள் இணைப்பு)
யாழ். ஆனைக்கோட்டை மூத்த பிரஜைகள் சங்கத்திற்கு தண்ணீர் தாங்கி அமைத்துக் கொடுப்பதற்காக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளார். மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து இதற்குரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த பிரஜைகள் சங்கத்தின் தலைவர் திரு. பொன்கலன் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (20.12.2014) நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,ஆரம்பக் கட்டமாக இந்த உதவியினை வழங்கியிருக்கின்றோம். தொடர்ந்தும் நாம் சங்கத்திற்கு உதவிகளைச் செய்து அதன் அபிவிருத்திக்கு வழிசமைப்போம் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலரும், அபிவிருத்தி திட்டமிடல் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த மூத்த பிரஜைகள் சங்கமானது முதியோர்கள் தனிமையைப் போக்கும் நோக்கில் தங்கள் வீடுகளிலிருந்து வந்து பகல் பொழுதினைக் கழித்துச் செல்கின்ற இடமாக இருந்து வருகின்றது. முதியோர்கள் பகலிலே அதிகமாக தங்களது வீடுகளிலேயே இருப்பவர்கள். என்பதால் அவர்களின் தனிமையைப் போக்குவதற்காக இங்கு வந்து சந்தித்துப் பேசி தங்களுடைய பொழுதைப் போக்கும் வகையில் இந்த சங்கம் அமைந்துள்ளது.