வட்டுக்கோட்டை அரசடி வீதியானது பன்நெடுங்காலமாக திருத்தப்படாத நிலையில் காணப்பட்து. இவ் நிலை தொடர்பில் அப்பகுதி அம்பாள் சனசமூக நிலையத்தினர் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கட்கு அறியத்தந்ததனைத் தொடர்ந்து தவிசாளர் இவ் விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட நாhடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கட்கு அறியத்தந்தனைத் தொடர்ந்து பன்முகப்படுத்தப்படட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக ரூபா 100000 ஒதுக்கீடு செய்யப்பட்டது இவ் நிலையில் அப் பகுதி வீதி புனரமைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் தவிசாளர் மேலும் ஏறத்தாள 3இலட்சம் ரூபா ஒதுக்கீட்டினை பிரதேச சபைக்கூடாக மேற்கொண்டு இவ் வீதி முழுமையாக செப்பனிடப்படுகின்றது. இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் அழைப்பில் 21.12.2014 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு வீதி வேலைத் திட்த்தினை பார்வையிட்டதற்கு மேலாக மக்களின் வேண்டுகோள்களையும் கேட்டறிந்து கொண்டார். இவ் நினகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ந.பி.ரஜ்குமார், சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்