மாதகல் புனித தோமையர் தேவாலய மாலைநேரப் பள்ளிக்கு கட்டிடம் அமைப்பு- (படங்கள் இணைப்பு)

SAM_2293யாழ்ப்பாணம், மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் மாலைநேரப் பள்ளியினை நடாத்துவதற்கு ஒரு கட்டிடம் இல்லாத நிலைமை இருந்தது. இந்த மாலைநேரப் பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியுதவியாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான தனது நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதியினைக் (100,000) கொடுத்து மேற்படி முன்பள்ளிக்கான கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்தார். இந்த நிதியுடனும், மாதகலைச் சேர்ந்த வெளிநாட்டு அன்பர்களின் நிதியுதவியுடனும் மேற்படி முன்பள்ளியின் கட்டிட வேலைகள் இடம்பெற்று தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரிமுதல் மாலைநேர பள்ளியின் செயற்பாடுகள் இப்புதிய கட்டிடத்தில் ஆரம்பமாகவுள்ளன. இக்கட்டிடம் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை (20.12.2014) புனித தோமையர் ஆலய அருட்பணிச் சபை செயலாளர் மா.ஜெராட்சி அவர்களின் தலைமையில் நiபெற்றது. இந்நிகழ்வில் தேவாலய பங்குத்தந்தை அருட்பணி கனீஸியஸ்ராஜ் மற்றும் அன்புக் கன்னியர் மடத்தின் சார்பில் அருட்சகோதரி லெற்ரீஷியா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய புனித தோமையர் ஆலய அருட்பணிச் சபை செயலாளர் மா.ஜெராட்சி அவர்கள், நலன் விரும்பிகள் இந்த முன்பள்ளியின் அபிவிருத்திக்கான நிதியுதவிகளை வழங்க முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலரும், அபிவிருத்தி திட்டமிடல் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி மாலைநேர பள்ளியில் மத வேறுபாடின்றி அப் பகுதியைச் சூழ இருக்கக்கூடிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று பயனுறுகின்றனர்.

SAM_2296SAM_2298SAM_2297SAM_2293SAM_2294SAM_2299SAM_2306SAM_2308