வவுனியாவில் மகிந்தராஜபக்சவுக்கு ஆதரவாக சிறீ ரெலோ பிரச்சாரம்

untitled1இன்று வவுனியா வடக்குப்பிதேசசெயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் மகிந்தவுக்கு ஆதரவானதேர்தல் பிரச்சாரம் ஒன்று  வவுனியா வடக்குப் பிரதேசசெயலகர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்கள் பிரிவிலிருந்து சமுர்த்திப்பணம் வழங்குவதாக திவிநெகும (சமுர்த்தி அலுவலர்கள்) அலுவலர்கள் மூலமாக பொது மக்கள் பிரதேச செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அலுவலகத்தினமாதலால் நூற்றுக்கணக்கான மக்களால் பிரதேசசெயலகம் நிரம்பி வழிந்தது. கூட்டம் ஆரம்பமாகியபோது மேற்படி கூட்டத்தில் கலந்த    கொண்டிருந்த வவுனியா மாவட்ட விளையாட்டு அதிகாரி  லலித் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிதேசசபை  உறுப்பினர்ர்கள், சமுர்த்தி தலைமைக்காரியாலய அதிகாரி மற்றும் மாவட்டசெயலக சமுர்த்தி உத்தியோகத்தர் கலீல் ஆகியவர்கள் மகிந்தவுக்கு ஆதரவான பிரச்சாரத்தினை நடாத்தினர் பிரச்சாரம் நடைபெற்ற வேளையில் இடைநடுவே சிறிரெலோ உதயராசாவும் மேற்படி கூட்டத்திற்கு வருகை தந்ததுடன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் சமுர்த்தி உதவி தருவதாக எம்மை அழைத்து தேர்தல் பிரச்சாரம் நடாத்துவதாக முணு முணுத்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் சலசலப்பு அதிகமாக மக்கள் தாமாகவே கூட்டத்தினை விட்டு வெளியேறியுள்ளார்கள் கூட்டத்தினை ஒழுங்கு படுத்தியவர்கள் மக்களை அமருமாறு கோரிய போதும் வெளியேறி உள்ளார்கள் கூட்டம் இடை நடுவே குழம்பியதால் கோபமடைந்த உதயராசாவும் அவரது குழுவினரும் பிரதேச செயலக வாயிலில் மக்களை ஒன்றுதிரட்டி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முனைந்தபோது மீண்டும் மக்கள் குழம்பியவாறு வெளியேறியுள்ளார்கள் என செய்திகள் கூறுகின்றன .

மகிந்த – மைத்திரிபக்கம் ஆதரவாளர்கள் தாவல்

mahinda-maithriமகிந்தபக்கம் – தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று 31.12 வவுனியா சுவர்க்கா விடுதியில் நடாத்தப்பட்ட ஊடகசந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரனி உதவித்தவிசாளர் ரிசிதாசன் மற்றம் உறுப்பினர்களான பேரின்பதரன், சிவராஜா ஆகியோரே அரசாங்கத்துக்க ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். மைத்திரிபக்கம் – குருநாகல் மாவட்டத்தின் முக்கிய பிரதேச சபைகளின் 18 உறுப்பினர்கள் இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுளதாகவும். இவர்கள் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் முக்கிய ஆதரவாளர்கள் என்றும்,  மேலும் வடமேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் ஆளும் தரப்பில் இருந்து 21 பேர் மைத்திரி வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் ஆதரவாளர்கள் உட்பட இருபத்தியொரு உள்ளூராட்சி உறுப்பினர்கள் மைத்திரி பக்கம் இணையவுள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.

காணமல் போன எயர் ஆசியா விமானம் கண்டுபிடிப்பு

airasiaகடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் பயணித்த வேளையில் காணாமல் போன விமானம் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானம் கடலில் கிட்டத்தட்ட 50 மீற்றர் ஆழத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு உடலங்கள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இந்த விமானத்தில் பயணம் செய்த மற்றவர்களின் சடலங்களையும் இந்த விமானத்தின் கருப்பு பெட்டியையும் தேடும் பணிகள் அந்த கடற்பரப்பில் வீசும் பலமான காற்று மற்றும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் காரணமாக தடைபட்டிருக்கின்றன. இந்த விபத்து மோசமான வானிலைக்கு நடுவே நடந்திருக்கும் இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை

அகதிகள் கப்பல் ஒன்றை இத்தாலிய கடற்படையினர் கரைசேர்த்துள்ளனர்

BBhn9QFசுமார் 700 அகதிகள் பயணிப்பதாக கருதப்படும் மால்தோவா நாட்டின் சரக்குக் கப்பல் ஒன்று இத்தாலிய நாட்டின் கடற்படையினர் கைப்பற்றி தெற்கு இத்தாலித் துறைமுகமான கல்லிபோலி துறைமுகத்தில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அகதிகள் அனைவரும் உள்ளூர் பள்ளிக்கூடம் மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சிரிய நாட்டு அகதிகள் இருந்ததாகவும். இந்த கப்பல் இத்தாலியை நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும், கடலின் நடுவே வைத்து இத்தாலிய கடற்படையினர் இந்த கப்பலுக்குள் ஏறியதாகவும். முன்னதாக கிரேக்கக் கடற்கரையோரமாக இந்த கப்பல் பயணித்தபோது இந்த கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்தாகவும் கூறப்படுகிறது. இந்த கப்பலை மனித கடத்தல்காரர்கள் என்று கருதப்படுபவர்கள் வழிநடத்தியதாகவும், கடலின் நடுவே இந்த கப்பலை அவர்கள் கைவிட்டுவிட்டு அதிலிருந்து ஓடிவிட்டதாகவும் அவர்கள் கைவிட்டபிறகு இந்த கப்பல் தானியங்கி முறையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இத்தாலிய கடற்படையினர் இதைக்கைப்பற்றி பத்திரமாக கரைக்கு கொண்டுவந்ததாகவும் அதே நேரம் இயந்தியரம் பழுதாகிய நிலையில் உதவி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதக்கடசியில் (நவம்பர்) 600 அகதிகள் இத்தாலிப்பகுதியில் தஞ்சம் கோரியதும். முன்பு பல படகுகள் இத்தாலிக் கடற்பரப்பில் விபத்தக்குள்ளாகி பல நூறு பேர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.